கோட்டக்குப்பம் அரசு பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி


பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

கோட்டக்குப்பம் அரசு மேனிலைப் பள்ளியில் 69 பேர் பிளஸ் ௨ தேர்வு எழுதினர். இதில், 31 மாணவர்கள், 37 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 99 சதவீதமாகும்.

மாணவி தமிழரசி 1051 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி அபர்ணா 1004 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். சாதனை புரிந்த மாணவர், ஆசிரியர்களை, தலைமையாசிரியர் பாஸ்கரன், பேரூராட்சி தலைவி ராபியத்துல் பசிரியா, துணைத் தலைவி சாந்தகணேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மலையாளத்தான் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.

Advertisements