கந்து வட்டி விழிப்புணர்வுப் பிரசாரம்


விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் காவல்துறையினர் கந்து வட்டி ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், அதிக வட்டிக்கு பணம் கொடுத்து மோசடி செய்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவருவதை தடுக்கும் விதத்தில், காவல் நிலையங்கள் தோறும் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்ய, மாவட்ட எஸ்.பி. விக்கிரமன் போலீஸாருக்கு அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, புதுவை மாநிலம் எல்லைப் பகுதியில் உள்ள கோட்டக்குப்பம் பகுதி மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை காலை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

கோட்டக்குப்பம் சந்திப்பில் இன்ஸ்பெக்டர் அரிகரன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீஸார் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

அதிக வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டுவோர் குறித்து தகவல் தெரிவிக்கவும், அது போன்ற நபர்களிடம் பணத்தை பெற்று பாதிக்கப் பட வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தினர்.

இது தொடர்பான புகார்களை 96554 40092 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

செய்தி உதவி : தினமணி நாளிதழ்

 

amma pattinam

(கோட்டக்குப்பத்தில் இதே போல அறிவிப்பு வைக்கும் காலம் வரும் என் நம்புவோம்)

 

Advertisements