மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா


கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழாவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன. இதில் முதல் இடத்துக்கு ரூ. ஐந்து ஆயிரம், இரண்டாம் இடத்துக்கு 2 ஆயிரம், மூன்றாம் இடத்துக்கு ரூ. 1000 வழங்கப்பட்டன.

பரிசுத்தொகையினை பேரூராட்சி தலைவி ராபியத்துல் பசிரியா வழங்கினார். தலைமையாசிரியர் பாஸ்கரன் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு 1/2 கிராம் தங்க காசினை வழங்கினார்.

அறிவியல் பாடத்தை கற்பித்த ஆசிரியர்களுக்கு 1/2 கிராம் தங்க காசுகளும், இந்த கல்வியாண்டில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு,நூறு மதிப்பெண்கள் பெற வேண்டும் என வாழ்த்தி பேசினார்.

மேலும் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக தற்செயல் விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கும், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியினை முது கலை ஆசிரியர் சுரேஷ் தொகுத்து வழங்கினார்.தலைமை ஆசிரியர் பாஸ் கரன் வரவேற்றார். ராபியதுல்லா பசிரியா தேசிய கொடியை ஏற்றி தலைமை யுரை ஆற்றினார்.கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத் துணைதலைவி சாந்தா கணேசன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினர். மூத்த ஆசிரியை சங்கரி நன்றியுரை ஆற்றினார்.

செய்தி : தினகரன்

Advertisements