கோட்டக்குப்பத்தில் மளிகை கடை தீயில் எரிந்து நாசம்


IMG_9502

 

கோட்டகுப்பம் தைக்கால் தெருவில் உள்ள சகாபுதீன் அவர்களின் மாளிகை கடையில் திடீர் என்று தீ பிடித்து எரிந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் தீ அணைப்பு துறையினர் வானூரில் இருந்து வந்தனர். அவர்கள் வரும் முன்னரே கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய். மின் இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவின் முலமாக தீ பரவியதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. கோட்டகுப்பம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

நமது கோட்டக்குப்பத்தில் இருந்து பல கிலோமிட்டர் தூரம் உள்ளது வானூர். நமதூரில் அசம்பாவிதம் நடைபெறும் போது இவர்கள் இங்கே வரும் நேரத்தில் அனைத்தும் முடிந்து விடுகிறது. இதற்கான ஒரே தீர்வு புதுவை தீ அணைப்பு நிலையத்தில் இருந்து வரும் வரையில் சட்டம் வர வேண்டும் இல்லை என்றால் நமதுருக்கு அருகே ஒரு தீ அணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். செய்வார்களா நமது ஆட்சியாளர்கள் …..

Advertisements