புதுவை நகர மன்றம் (மேரி ஹால்) இடிந்து விழுந்தது


 

IMG_9381

புதுச்சேரியில் 200 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடிக் கட்டடம் கன மழையினால் இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. கட்டடம் மிகவும் பழுதடைந்திருந்ததால் நகராட்சி அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த கட்டடத்தை அரசு புணரமைப்பதற்காக நான்கு மாதத்திற்கு முன்பு இண்டாக் என்ற அமைப்பிடம் கொடுத்து புணரமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்த கட்டடத்தில் 9 பேர் புணரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மதியம் உணவு உண்பதற்கு வெளியேறிய போது கட்டடத்தின் உள்பகுதி முற்றிலும் இடிந்து உள்ளே விழுந்தது. வெளியில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீதமுள்ள கட்டடத்தின் சுற்றுச் சுவர் இடியும் நிலையில் உள்ளதால் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லாதவாறு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

பிரெஞ்சு அரசாங்கம் கட்டி கொடுத்த அழகான கட்டிடங்களை சுதந்திர இந்தியாவில் பராமரிக்காமல் விட்டதால் நாம் இந்த கட்டிடத்தை இழந்து விட்டோம். இன்னும் பிரெஞ்சு அரசாங்கம் விட்டு சென்ற கலவை கல்லூரி (calve college) மற்றும் வா வு சி பள்ளி (voc high school)கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதையாவது புதுவை அரசு பாதுகாக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements