ஷரியத் சட்டத்தின்படி மியூச்சுவல் பண்டு எஸ்.பி.ஐ., வங்கி துவக்குகிறது


இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் மக்களுக்கான, மியூச்சுவல் பண்டு திட்டத்தை, முதல் முறையாக, எஸ்.பி.ஐ., வங்கி, அடுத்த மாதம் துவக்குகிறது.ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் மக்கள், தாங்கள் செய்யும் முதலீடுகளில் இருந்து வட்டி பெறுவதோ அல்லது தருவதோ கூடாது. இதன் காரணமாக, அவர்கள், வட்டி வரும் வகையிலான முதலீடுகளை செய்வதில்லை.முஸ்லிம் நாடுகளில் உள்ள இஸ்லாமிய வங்கிகள் கூட, வட்டி தொடர்புள்ள, எந்த முதலீடுகளையும் ஊக்குவிப்பதில்லை.நாடு முழுவதும் உள்ள, 17 கோடி முஸ்லிம் மக்களின் நலன் கருதி, அவர்கள் சட்டப்படி, புதிய முதலீட்டு திட்டத்தை, அரசு வங்கியான எஸ்.பி.ஐ., துவக்குகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளன.எஸ்.பி.ஐ., வங்கியின், இந்த புதிய முதலீட்டு திட்டத்தில், எத்தகைய வட்டியும் இல்லை என்பதால், இதற்கு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

Advertisements