கவிஞர் அ.லியாகத் அலி @ கலிமுல்லாஹ்வை வாழ்த்துகிறோம்


10245588_1507128009530805_3784558642563844389_n

கோட்டக்குப்பம் பெயரை இன்று அனைவரும் அறியும் வண்ணம் தமது கைவண்ணத்தில் கவிதை வரைந்த அ.லியாகத் அலி என்னும் கலிமுல்லாஹ் அவர்களின் கவிதை இன்றைய வாரம் ஜூனியர் விகடனில் வந்துள்ளது. அ.லியாகத் அலி அவர்கள் பல கவிதை எழுதி நமதுரின் பெயரை உலகறிய செய்ய நாம் அனைவரும் அவரை வாழ்த்துவோம்.

p36

நீ ஆனையிட்டாய்… எனை ஆணியிலிட்டாய்!

– அ.லியாகத் அலி 

நீ ஆணையிட்டாய்

 எனை ஆணியிலிட்டாய்  இதையெண்ணி

யாரும் கவலைப்பட மாட்டார்!

உயிருள்ளவரை

ஓர் இன்பம் இல்லை  இந்த

பன்னீர் எதற்கும் விழமாட்டான்!

 ஒரு பேனர் வைத்தால்

அதை தெரிந்து வைத்தால்  அவன்

அதிகாரி என்றாலும் விடமாட்டேன்.

உடன் எடுக்கச் சொல்வேன்  அதை

பிய்த்து எறியச் சொல்வேன்  அம்மாவின்

உரிமைப் பொருளைத் தொடமாட்டேன்!

 சிலர் ஆசைக்கும் தேவைக்கும்

வாழ்வுக்கும் வசதிக்கும்

கால் பிடிப்பார்

இது பதவியில்லை

அதில் சுகமுமில்லை  இருந்தும்

தாள் பணிவேன்!

காலையில் ஷீலா வந்தார்

மாலையில் ராமானுஜம் வந்தார்  இந்த

மானுடன் சிரித்திட பாடுபட்டார்.

இவன் சிரிக்கவில்லை

உடல் சிலிர்க்கவில்லை  தாயே

கதியென்று கலங்கி நின்றான்!

நான் இன்று தொங்கவும்

தொண்டர்கள் ஏங்கவும்

நீயே பார்த்திருப்பாய்…

ஒரு காலம் வரும்  இந்த

கருமம் தீரும்  கழகக்

கூட்டத்தை மேய்த்து கரை சேர்ப்பேன்

அதிகார போதையில்லை  கேட்க

ஒரு நாதியில்லை  நிதம்

அம்மாவின் படத்திலே விழித்திருப்பேன்!

நன்றி : ஜூனியர் விகடன்

Advertisements