கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு


indian-national-congress-logo1 (1)

 

tmp10

கோட்டக்குப்பத்தில் நேற்று 16/11/2014  அன்று  கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் முகமது பரூக் வரவேற்றார். நகர பொருளாளர் சிவக்குமார், நகர செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் மகஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட சேர்மன் தசரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், திருமலை, பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்துவிட்டு ஜி.கே.வாசனுக்கு ஆதரவு அளித்து அந்த கட்சியில் இணைவது மற்றும் வருகிற 28–ந் தேதி திருச்சியில் ஜி.கே.வாசன் நடத்தும் மாநாட்டில் 50 வாகனங்களில் சென்று கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

Advertisements