ஜனாப். காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்களை பற்றி ஜனாப். லியாகத் அலி கலிமுல்லாஹ் அவர்களின் ஆதங்கம்


கட்டுரை : ஜனாப் லியாகத் அலி கலிமுல்லாஹ்

கோட்டக்குப்பம் காஜி ஜைனுல் ஆபிதீன் –

என்றொரு மனிதர் வாழ்ந்தார்; மறைந்தார் என்பதல்ல –

அவர் எப்படி பழகினார் – எவ்வாறு செயல்பட்டார் என்பதை அறியத்தருவதற்கே இந்த பதிவு.

அரசியல் – சமூக – இலக்கிய தளத்தில் பல்வேறு பொறுப்புகளை தோளில் ஏற்றுக்கொண்டபோதும் தலையில் ஏற்றிக்கொள்ளாத எளிய மனிதர்.

மனித உறவுகளைப் பேணுவதில் மாணிக்கம்.
புத்தகங்களுடன் பேசியவர் – அவற்றை காதலித்தவர்களை காதலித்தவர்.

அஞ்சுமன் நூலகத்தில் புத்தகங்களுக்கும் அவருக்குமான தொடர்பை நூலகத்தை நாடிவந்த ஆய்வாளர்கள் நன்கறிவர்.

அவருடன் நெருங்கிப் பழகவும் – பயணம் செய்யவும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில் அன்னாரின் பழகுமுறை பண்புகள் பெரிதினும் பெரிதாகும்.

10 வயது பாலகன் 90 வயது முதியவர் வரை யாரோடும் ஒத்துப்போகும் அதிசய குணம் கொண்டவர். எல்லோரிடமும் இணைந்து செயலாற்ற முனைந்து நிற்பவர். பயணம் செல்கையில் உடன் வருபவரின் விருப்பமே அவரது விருப்பம். உணவு முதல் உறைவிடம் வரை அவரிடம் இருந்த அனுசரணை யாரிடமும் காணக் கிடைக்காத ஒன்று.

விமர்சனங்களை எதிர்கொள்வதிலும் பொது தளத்தில் செயலாற்றுவதிலும் அவர் காட்டிய பக்குவம் வியக்கத்தக்கது

தனிப்பட்ட முறையில் ஒரு சிறந்த வழிகாட்டியையும் கிரியா ஊக்கியையும் இழந்திருக்கிறேன். என்னை எழுதத் தூண்டி, முதல் வாசகனாகவும் விளங்கி, சிறிய செய்திகளையும் பாராட்டி, பலவகையில் என்னை செதுக்கிய மாமனிதர். அவரின் இழப்பில் ஓர் வெறுமை…

எங்கும்..
எதிலும்..

Advertisements