முஸ்லிம் லீக் தலைவர் கோட்டக்குப்பம் காஜி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்


இஸ்லாமியத் தமிழலக்கியக் கழகத்தின் துணைத் தலைவரும், பேச்சாளரும், சமூகப் பணியாளரும், இலக்கிய ஆர்வலரும், கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், அஞ்சுமன் நூஸ்ரத்துல் இஸ்லாம் நூலகத்தின் பொதுச் செயலாளருமான கோட்டகுப்பம் காஜி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இன்று 15/11/2014 மாலை  வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ) (“நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)

இலக்கியக் கழகத்தின் 6வது மற்றும் 9வது ஆண்டு பெருவிழாவை முன்னின்று நடத்தியவர், மேலும் தமிழக அரசின் தமிழ் மாமணி விருது பெற்றவர் ஆவார்.

 

அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள எல்லாம் வல்ல இறைவனிடம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் ஆமீன்!