Islamic New Year 1436 H / 2014


Islamic-Happy-New-Year-1436-Wallpapers-Images-FB-Covers-2

கட்டுரை ஆக்கம் :  முனாப் நுபார்தீன் 

இப்புவியில் வாழும் அனைத்து இனத்தினர்களும் மதத்தினர்களும் தங்களுக்கென்று வேறுபட்ட சில வருடப் பிறப்புக்களைக் கொண்டாடி வருவதனைப் பார்கின்றோம். அந்த வகையில் ஆங்கில வருடப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு, சிங்கள வருடப் பிறப்பு என்ற வழக்கம் நடைமுறையில் இருப்பதனை எம்மால் காண முடிகின்றது. உலகில் பொதுவாக சூரிய சுழற்சியைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ள நாட்காட்டியே பயன்பாட்டில் இருந்த போதும் அனைத்தினத்தினர்களும் சந்திரனைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ள நாட்காட்டியின் அடிப்படையிலேயே தங்களது வருடப் பிறப்பினைக் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் நமது வருடப்பிறப்பாக ஹிஜ்ரி வருடம் காணப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு அல்லாஹ்வின் அருளால் எமது வருடப்பிறப்பாகிய நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சி (ஹிஜ்ரத்) நடந்தேறி 1435 சந்திர வருடங்களைக் கடந்து  25-10-2014 அன்று கிருஸ்த்து வருடம் சனிக்கிழமைன்று ஹிஜ்ரி 1436 ல் நுழைந்தது.

முஹர்ரம் என்பது ஹிஜ்ரி வருடத்தின்; முதல் மாதம் ஆகும். முஹர்ரம் என்பதற்குப் புனிதமானது – புனிதமிக்கது அல்லது தடுக்கப்பட்டது என்பது பொருளாகும்.

வல்ல அல்லாஹ் மனிதர்களாகிய நாம் தீமைகளிலிருந்து தவிர்த்து அதிகமான நன்மைகளில் நம்மை ஈடுபடுத்தும் வகையில் குறிப்பிட்ட சில இடங்கள் காலங்கள் ஆகியறவற்றை புனிதம் வாய்ந்ததாகவும் அந்த இடங்களிலும் காலங்களிலும் தீமைகள் புரிவதைத் தடுக்கப்படதாகவும் ஆக்கி இருக்கின்றான்.

அவ்வாறு புனிதம் வாய்ந்த தீமைகள் தடுக்கப்பட்ட மாதங்களில் முஹர்ரம் மாதம் முதன்மையானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்-குர்ஆன்: 9:36)

மேற்படி வசனத்தில் கூறப்பட்டுள்ள புனிதமான மாதங்கள் என்பது முறையே:

1. முஹர்ரம்
2. துல்-கஃதா
3. துல்-ஹஜ்
4. ரஜப்

ஆகிய நான்கு மாதங்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு வருடம் பன்னிரண்டு மாதங்களைக் கொண்டதாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும் அவற்றுள் மூன்று மாதங்கள் தொடராக வரக்கூடிய துல்-கஃதா துல்-ஹஜ் மற்றும் முஹர்ரம் அத்துடன் ஜமாதில் ஆகிர் ஷஃபான் ஆகியவற்றுக்கிடையில் வரக்கூடிய ரஜபுல் முழர் எனும் மாதமுமாகும்.(நூல் : புகாரி)

நாம் மேலே குறிப்பிட்ட அல்-குர்ஆனின் 9:36 வசனத்தின்படி நாம் இந்த மாதங்களில் எவருடனும் போர் புரிதல் கூடாது. அதே சமயம் நமது விரோதிகள் நம்முடன் வலிய சண்டைக்கு வந்தால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் போரிடலாம் என்பதை அறிகிறோம். இதன் மூலம் மனித சமுதாயத்தில் சண்டைச் சச்சரவற்ற ஒரு அமைதியான நிலையை உருவாக்குதல் முஸ்லிம்களின் கடமையாகிறது. இது அல்லாஹ் தனது திருமறை குர்ஆன் மூலம் நமக்கிடும் கட்டளையாகும். இக் கட்டளையை சரிவர நிறைவேற்றுவோம் என உறுதி பூண்டவர்களாக ஹிஜ்ரி வருடத்தை வரவேற்க வேண்டும். இதுவே திருக்குர்ஆன் முஸ்லிம்களிடையே எதிர்பார்க்கும் விசேட செயலாகும்.

அத்துடன் இவ்வாறு புனிதத்தன்மை வாய்ந்த இடங்களிலும் காலங்களிலும் தீமை செய்வதென்பது ஏனைய இடங்களிலும் காலங்களிலும் செய்யப்படும் தீமைகளை விட மிகக் கடுமையானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும்ää மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும்ää தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.(அல்-குர்ஆன் : 22:25)

இந்த மாதத்தில் முடிந்த அளவு அதிகமாக நோன்பு நோற்றல் வரவேற்க்கத்தக்கதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமளானுக்குப் பின் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு – அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். பர்ழான (கடமையான) தொழுகைக்குப் பின் மிக்க சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும். ( நூல் : முஸ்லிம்ää அஹ்மது.)

ஆஷுறா நோன்பு :

இந்த மாதத்தில் 10 நாளன்று நோன்பு நோற்றல் சுன்னத் நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுறா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள்ää நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன? என்று கேட்டார்கள்.

அதற்கு யூதர்கள் : இது ஒரு புனிதமான நாள். இன்று தான் மூஸா (அலை) அவர்களையும், அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன் மற்றும்அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி, அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கிறோம் என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களின் விசயத்தில் உங்களை விட நானே அதிகம் உரிமையும், தகுதியும் உடையவன் எனக் கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (நூல்; : புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

இந்த நோன்பு கடந்த ஒரு வருடத்திற்குரிய பாவத்திற்கான பரிகாரமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷுறா தினத்தன்று நோற்கப்படும் ஒரு நோன்பானது அல்லாஹ் அதை கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி விடுவான். (நூல்: திர்மிதி)

இந்த நபிமொழி மூலம் முஹர்ரம் ஆஷுறா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பது கட்டாயக் கடமை போலத் தெரியலாம். ஆனால் இது கட்டாயக் கடமையல்ல. காரணம் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில் – ரமழானின் கட்டாய (பர்ளான) நோன்பு கடமையாக்கப்படாத போது – நிகந்த நிகழ்ச்சியாகும் இது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு இந்த ஆஷுறா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டுமென ரசூல் (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. இதனைக் கீழ்க்காணும் நபி மொழி தெளிவுபடுத்துவதைக் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது ஆஷுறா தினத்தின் நோன்பு நோற்கக் கட்டளையிட்டிருந்தார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டபின்ää விரும்பியவர்கள் ஆஷுறா தினத்தில் நோன்பு நோற்கட்டும். விரும்பியவர்கள் விட்டு விடட்டும் எனக் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத்-அஹ்மத்.)

யூதர்களுக்கு மாறு செய்தல்.

அன்றய நாளில் யூதர்களும் நோன்பு வைப்பதனால் அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 10ம் தினத்திற்கு முன்னால் 9ம் தினத்தையும் அல்லது 11ம் தினத்தையும் இணைத்து இரண்டு நோன்புகள் வைத்தல் வேண்டும்.

ஆஷுறா (பத்தாம்) தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர் என நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறிய போதுää அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுகு;கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் மறுவருடன் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (நூல் : முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)
இந்த நபிமொழியின் மூலம் நாம் முஹர்ரம் மாதம் 9ம்10ம் நாட்களில் நோன்பு நோற்பது நபி வழி (சுன்னத்) என்பதை அறியலாம். அவ்வாறு 9ம் 10ம் தினங்களில் நோன்பு வைக்கத்தவறின் யூதர்களுக்கு மாறு செய்யும் வகையில் 10ம் 11ம் தினங்களில் வைக்கலாம்.

Advertisements