புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


DSC_1328

 

லட்சத்தீவு – கேரளா ஒட்டிய கடற்பகுதியில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சென்னை, திருச்சி, மதுரை, கோவை, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழைக்கான உகந்த சூழல் நிலவுவதால் இன்னும் இரு தினங்களில் வடகிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம், தூத்துக்குடியில் 6 செ.மீ மழையும், சாத்தான்குளம், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.