கோட்டக்குப்பத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு பொதுமக்கள் கடும் பீதி


téléchargement

 

கோட்டக்குப்பம் பகுதியில் வேகமாக பரவி வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

புதுவை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பரக்கத் நகரில் திறந்தவெளி வடி கால் வாய்க்கால் உள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி கேந்திரமாக விளங்குகிறது.

 

தற்போது இப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார், அரசு மருத்துவமனைகளிலும், புதுவை ஜிப்மரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பரக்கத் நகர் மட்டுமின்றி பிற பகுதிகளுக்கும் மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியானதால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். ஆனால் இதுவரை சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை என குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

 

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்ட போது, மர்ம காய்ச்சல் பாதிப்பு குறித்த தகவல் எதுவும் வரவில்லை. இருப்பினும் அப்பகுதியில் குப்பைகள், கழிவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் மருத்துவ முகாம் நடத்தப்படும், என்றார்.

 

நன்றி செய்தி உதவி : தினகரன்
Advertisements