கோட்டக்குப்பத்தில் நாளை (06/10/2014) ஹஜ் பெருநாள்


siJnjav

 

கோட்டகுப்பம் ஈத்காஹ் திடலில் இன்ஷா அல்லாஹ் நாளை 06/10/2014  திங்கள் கிழமை சரியாக காலை 9.00 மணிக்கு  ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறும் என்று ஜாமியா மஸ்ஜித் நிர்வாக கமிட்டியால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

அனைவருக்கும் கோட்டகுப்பம் இணையத்தளம் சார்பில் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் …!

 

 

இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்! அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!

 

 

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே… ஏற்கனவே கொண்டுள்ள நம் நல்ல‌ எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக!

 

 

இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற உலகத்தின் நம் உறவுகள் அத்தனை பேருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஏக இறைவன் ஆக்கியருள்வானாக!

 

 

இதுவரையிலும் ஹஜ் செய்ய வாய்ப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் அனைவ‌ருக்கும் வெகுவிரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் இந்த தியாகத் திருநாளிலே வல்ல இறைவனிடம் கண்ணீரோடு இறைஞ்சி நிற்கிறோம். அதேபோல் அனைவரும் இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகிறோம் . அல்லாஹ் நம் பிரார்த்தனைகளை கருணையோடு ஏற்றுக்கொள்வானாக! ஆமீன்.

 

 

 

 

Advertisements