ஜாமியா மஸ்ஜித் தேர்தல் குழுவுக்கு பொதுமக்களின் அவசர கோரிக்கை ….!


Sans titre

 

கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வக்ப் வாரியம் முலம் ஜூன் 15, 2014 அன்று தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கபட்டது அனைவரும் அறிவோம்.

 

இந்த தேர்தல் முலம் 24 பேர் அடங்கிய நிர்வாக கமிட்டி அமைக்க வக்ப் வாரியம் அணைத்து ஏற்பாடுகளையும் செய்தது. தெரு வாரியாக தெரு உறுபினர்களை தேர்ந்தெடுக்காமல் ஒருவரே 24 பேருக்கு வாக்களிக்கும் வகையில் இருப்பதால் குழப்பம் வரும் என்று பலரும் தெரிவித்ததால் , வக்ப் வாரியம் பொதுமக்களே தங்கள் விரும்பும் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து தெரிவித்தால் அவர்களை தாங்கள் அரசாங்கத்தின் முலம் ஒப்புதலை தருவதாக கூறியதை அடுத்து ஹாஜி. E. அப்துல் ஹமீத் தலைமையில் 5 நபர்கள் கொண்ட தேர்தல் குழு அமைக்க பட்டது.

 

தேர்தலை வாக்காளர் பட்டியலை வைத்து நடத்தாமல் ஜாமியா மஸ்ஜிதுக்கு தலைக்கட்டு கட்டும் மக்களின் முலமாக நடத்த முடிவு செயப்பட்டது. தேர்தல் குழு ஊரில் உள்ள அணைத்து தலைக்கட்டு கட்டும் மக்களின் விபரங்களை சேகரிக்க ஆரம்பித்தது, உடனே ரமலான் மாதம் வந்ததால் இந்த மாதத்தில் அனைவரிடமும் தலைக்கட்டு காசு வாங்குவதால் அதை பயன் படுத்தி தெளிவான விபரம் சேகரிக்க முடிவு செயப்பட்டது மேலும் பெருநாளுக்கு பிறகு தேர்தலை நடத்தலாம் என்று ஆலோசனை செயப்பட்டது.

 

ரமலான் பெருநாள் முடிந்து பல நாட்கள் ஆகியும் இது வரை தேர்தல் குறித்து ஒரு தகவலும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வில்லை, இந்த அமைதி பல சந்தேகங்களுக்கு வழி வகுக்கிறது. 

 

 

 தமிழ்நாடு வக்ப் வாரிய அதிகாரிகளும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து கோர்ட் ஆணைப்படி பொதுமக்கள் முலம் தேர்தெடுத்த நிர்வாகம் அமைய ஆவன செய்ய வேண்டும்.

 

 

கடல் கடந்து வாழும் நமதூர் மக்கள் மற்றும் உள்ளுரில் இருக்கும் மக்களுக்கு எப்போது ஜாமியா மஸ்ஜித் நிர்வாக தேர்தலை நடத்தும் என்று,  தேர்தல் குழு பகிரங்கமாக பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

 

இனிவரும் காலங்கள் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்தோடு நடைப்போட  என்றும் அல்லாஹ் துணை புரிவான்.

Advertisements