இ.சி.ஆர்., சாலையில் புதிய மின் விளக்குகள்….


IMG_8669

கோட்டகுப்பம் புறநகரில் அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளில் ஒன்று கிழக்கு கடற்கரை சாலை. புதுவை மற்றும் சென்னை செல்லும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தும் இச்சாலையில் அதிகம். நாள் ஒன்றுக்கு இச்சாலையை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். வார விடுமுறை நாட்களிலும் போக்குவரத்திற்கு குறைவில்லை. இதன் காரணமாக இரவு, பகல் என 24 மணிநேரமும் போக்குவரத்து காணப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையை பொறுத்தவரை புதுவை வரை சென்டர் மீடியன் பகுதியில் விளக்கு வசதி செய்யப்பட்டிருந்தாலும், தமிழக சாலை பகுதியில் விளக்கு வசதி கிடையாது. இச்சாலையில் இரவுநேர வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. சாலை விளக்கு வசதி இல்லாத காரணத்தால் விபத்துக்கள் அதிகம் அரங்கேறுகின்றன. எனவே, போர்க்கால அடிப்படையில் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் பொதுமக்களுடன் சேர்ந்து நாமும் கோரிக்கை விடுத்தோம்  . கோட்டகுப்பம் செய்திகள் இது குறித்து செய்தி வெளியிட்டோம். இதை அடுத்து தற்போது விளக்கு அமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இது வாகன ஓட்டுனர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.

 

 

Advertisements