Follow Up : தாகம் தணிக்கும் சுவையான நீர் – தொடும் துரத்தில் (தொட்டு விட்டது )


IMG_8579

கோட்டகுப்பம் இணையத்தளம் தண்ணீர் தேவைக்கான கட்டுரை முன்னரே வெளியிட்டோம் , பழைய செய்தியை காண இதை அழுத்தவும்,  அதன் தொடர்ச்சி இதோ ……….

IMG_8642

IMG_8643

 

கோட்டகுப்பம் பேரூராட்சி தேர்தலில் அப்துல் ஹமித் அதரவு பெற்ற வேட்பாளர் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் முக்கியமானது கோட்டக்குப்பம் மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்க அவன செய்வதாக, அதை தொடர்ந்து பொதுமக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று ஜெயித்து வந்த முதலே இதற்க்கான வேலைகளை தொடங்கி விட்டார்.

 

IMG_8580

 

கோட்டகுப்பதை அடுத்துள்ள சின்ன கோட்டக்குப்பத்தில் சுவையான நல்ல தண்ணீர் கிடைக்கும் இடத்தில் இருந்து கோட்டகுப்பம் வரை 5 கிலோமிட்டர் அளவுக்கு பைப் லைன் அமைத்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பம்பிங் ஸ்டேஷன் அமைத்து தண்ணீர் சீரான வேகத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்கள். பரக்கத் நகர் வரை இந்த பனி முடிந்து விட்டது, மேலும் இந்த பகுதி வரை சோதனைக்காக தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

 

 

இன்னும் இரண்டு கிலோ மிட்டர் தூரம் பை அமைத்து பள்ளிவாசல் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விட்டால் கோட்டகுப்பம் பகுதி மக்களுக்கு சுவையான குடி நீர் கிடைக்கும். இத்தனை  வருடமாக நடைபெற்ற இந்த வேலை முடியும் தருவாயில் உள்ளது, இனி கோட்டகுப்பம் பெரியபள்ளிவாசல் அருகே உள்ள நீர் தேக்க தொட்டியில் இருந்து அதிக வேகத்தில் தண்ணீர் கிடைக்கும், பொதுமக்கள் பலர் தங்களது விடுகளில் மோட்டார் இணைத்து தண்ணிரை உறிஞ்சி வருகிறார்கள். பேரூராட்சி அதிகாரிகள் விடுகளில் சோதனை செய்து, அவர்கள் மீது அதிகபடியான அபராதம் விதிக்க வேண்டும், மேலும்  அவர்களின் தண்ணீர் இனைப்பை துண்டிக்க வேண்டும். பலருக்கு பயன் படும் தண்ணீரை சிலரே பயன்படுத்தும் நிலையை மற்ற வேண்டும். தண்ணீரை முறைகேடாக திருடும் மக்களின் பெயர்களை பொதுமக்களின் பார்வையில் வைத்தல், இவர்கள் திருந்தும் வாய்ப்புள்ளது.

 

தண்ணீர் திருட்டு குறித்து விரைவில் கோட்டகுப்பம் இணையத்தளத்தில் கட்டுரை பதிய படும்.

 


பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நம் மக்களுகாக உழைக்கும் பேரூராட்சி தலைவர் மற்றும் அவருக்கு அதரவாக இயங்கும் அப்துல் ஹமித் அவர்களுக்கு மக்களின் சார்பில் நன்றி.