கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு – அல்ஹம்துலில்லாஹ்


20140530-191235-69155570.jpg20140530-191234-69154283.jpg

இன்று (30 -05-2014 ) ஊர் நிர்வாக போர்டில்  கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக குழு தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியலை ஒட்டிவிட்டு, அதிரடியாக தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளது வக்பு போர்டு. தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிபோட்டுகொண்டே போன வக்பு போர்டின் இந்த அறிவிப்பால் ஜமாத்தார்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன் விபரம் கீழே:

 

03-06-2014 – வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

05-06-2014 – வேட்பு மனு பரிசீலனை, அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

06-06-2014 – வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்

06-06-2014 – இறுதி வேட்பாளர் பட்டியல், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குதல்

15-06-2014 – காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ரகசிய வாக்கெடுப்பு

15-06-2014 – அன்றே வாக்கு எண்ணி முடிவு அறிவித்தல்

 

அல்லாஹ்வின் உதவியால் ஜமாத்தார்கள் விருப்பபடியே ரகசிய வாக்கெடுப்புக்கு தேதி அறிவித்தாயிற்று. இன்ஷா அல்லாஹ் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்   அல்லாஹ்விற்கு மட்டுமே பயப்பட்டு ஊரின் நலனில்  அக்கறை கொண்டு தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டு கொள்கிறோம்.

 

தேர்தல் விதிமுறைகள்:

 

1. 24 நபர் கொண்ட நிர்வாகத்திற்கான தேர்தல் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைப்பெறும்.

 

2. இறுதி வாக்களர் பட்டியலில் இடம் பெற்ற வாக்காளர் மட்டுமே தேர்தலில் போட்டியிட தகுதி உடையவர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

 

3. 10000/-ரூபாய் (பத்தாயிரம் மட்டும்) வேட்பு மனு கட்டணமாக ரொக்கமாக தேர்தல் அதிகாரியிடம் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்.இடம்.மற்றும் நேரத்தில் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

 

4. வேட்புமனுவை குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்குள் திரும்ப பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வேட்புமனு கட்டணம் திரும்ப கொடுக்கப்படும். மற்றவர்களுக்கு வேட்பு மனுகட்டணம் எக்காரணத்தை கொண்டும் திரும்ப கொடுக்கப்படமாட்டாது.

 

5. வேட்பு மாதிரி படிவம் பள்ளிவாசல் தகவல் பலகையிலும் தேர்தல் அலுவலரிடம் அவரது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளவும்.

 

6. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் மேற்ப்படி வக்பிற்கு சொந்தமான சொத்துகளில் வக்பு வாரிய சிறப்புத் தீர்மானம் எண் 11788/பொது/C3/07 நாள்:18.08.2008ன் படி தான்.தனது தாய்.தந்தை.மனைவி. மனைவிகளின்.மகன்.மகள். மற்றும் வாடகை தாரராகவோ குத்தகை தாரராகவோ இருந்தல் கூடாது.மேலும் வேட்பாளர் குற்றவியல் சட்டப்படி தண்டனை பெற்றவராகவோ அல்லது இன்சால்வன் சி பெற்றவராகவோ இருத்தல்கூடாது.

 

7. மேலும் வேட்பாளர் குற்றவியல் தண்டனை பெற்றவராகவோ அல்லது இன்சல்வன்சி (திவால் ) பெற்றவர் இருக்க கூடாது.

 

8. வாக்ப் சட்டம் 1995 பிரிவு 64 (8) படி தமிழ்நாடு வக்ப் வாரியத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முத்தவல்லி அல்லது நிர்வாககுழு உறுபினர்கள் நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அந்த வக்ப் நிர்வாகத்துக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியற்றவர் ஆகிறார். அதன்படி வக்ப் வாரியத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேற்குறிப்பிட்ட காலமான 5 ஆண்டுகளுக்குள் இருப்பின் இத்தேர்தலில் போட்டியிட இயலாது.

 

9. ஒவ்வொரு வக்காளரும் ஒரு வாக்கு சீட்டில் 24 நபர்களுக்கு வாக்களிக்கவேண்டும். அதற்குமேல் வாக்களித்தால் அந்த வாக்கு சீட்டு செல்லாது. வேட்பாளராக போட்டியிடுபவர். மாற்றொரு வேட்பாளருக்கு முன் மொழியவோ அல்லது வழி மொழியவோ கூடாது.

 

10. பிறர் ஒரு வேட்பாளருக்கு முன் மொழிந்தால் அவரே வேறு ஒரு வேட்பாளருக்கு வழி மொழியாலாம்.ஆனால் ஒருவரே இருமுறை முன் மொழியவோ வழி மொழியவோ கூடாது. அப்படி இருந்தால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும்.

 

11. வேட்புமனு தாக்கல் வேட்புமனு பரிசிலனை வேட்புமனு திரும்ப பெறுதல் மற்றும் எண்கள் ஒதுக்குதல். ஆகியவைகளுக்கு வேட்பாளர்கள் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள.நாள்.இடம். மற்றும் நேரத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும்.

 

12. தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான எழும் அனைத்து பிரசனைகளுக்கும் வக்பு கண்காணிப்பாளர்/தேர்தல் அதிகாரி அவர்களின் முடிவே இறுதியானது.

 

13. தேர்தல் வாக்குபதிவின் போதும் வாக்குகள் எண்ணிக்கையில் போதும் வேட்பாளர்களின்அத்தாட்சி பெற்ற முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

 

14. தேர்தல் வாக்குச்சாவடியில் வாக்கு அளிக்க வரும் போது. தேர்தல் ஆணையம் கூறிய 14 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் (Original)கண்டிப்பாக கொண்டுவரவேண்டும்.

 

15. தேர்தலின் பொது ஒரு வாக்கு சாவடிக்கு வேட்பாளர் தலா ஒரு முகவர் (AGENT) மாற்று முகவர் ஒருவரை நியமிதுகொள்ள அனுமதி உண்டு.

 

16. முத்திரை இரண்டு சின்னகளுக்கு மத்தியில் வைத்திருந்தால் அந்த வாக்கு செல்லாது.

 

 

 

தேர்தல் அதிகாரி/வக்ப் கண்காணிப்பாளர்
512, காந்தி ரோடு, பண்ருட்டி – 607106.

Advertisements