மே 1 முதல் அமலாகிறது அதிகாரப்பூர்வ மின்வெட்டு!


 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஏற்கனவே பரவலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வரும் நிலையில், மே 1 முதல் சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் பல மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

 

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பல மணி நேர மின் வெட்டு நிலவி வந்தது. எனினும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக மின் வெட்டு குறைந்திருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், வழக்கம் போல சென்னையில் 2 மணி நேர மின்வெட்டும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பல மணி நேர மின்வெட்டும் அமலுக்கு வருகிறது.

 

மற்ற மாவட்டங்களில் எத்தனை மணி நேரம்?

 

மற்றமாவட்டங்களில் எத்தனை மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்பதை மின்வாரியம் தெளிவாக அறிவிக்காமல் பல மணி நேரம் என மழுப்பி இருப்பதால், கடந்த ஆண்டைப்போலவே 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு அமலானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இந்த அளவுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினாலும், மின்வாரிய அதிகாரிகள் 4 மணி நேரம் அல்லது 6 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமல்படுத்துவதாக கூசாமல் பொய் கூறுவர். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று பார்த்தால்தான் அங்கு மக்கள்படும் அவதிகளை உணர முடியும்.

இந்த அவதியை உணர சென்னையையடுத்துள்ள பட்டாபிராமை தாண்டினாலே திருவள்ளூர் மாவட்டத்திற்குள் வரும் திருநின்றவூர், வேப்பம்பட்டு தொடங்கி சென்னைக்கு அருகில் உள்ள பல இடங்களிலேயே சர்வசாதாரணமாக மின்வெட்டு கொடுமையை உணரலாம். அதிலும் இரவு நேர மின்வெட்டு இன்னும் கொடுமை. ஒவ்வொரு மணி நேரம் இடைவெளிவிட்டு 7-8, 9 – 10, 11- 12, 1- 2… என அமலாகும் இந்த மின்வெட்டு, மக்களை தூங்கவிடாமல் படுத்தி எடுத்திவிடும்.

 

Advertisements