விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?…


your_vote_counts_button_3

விழுப்புரம் பாராளுமன்ற   தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?… 

அன்பான வாசகர்களே உங்களது மதிப்புமிக்க வாக்கு யாருக்கு?

உங்களது வாக்கினை கிழ்கண்ட  இணைப்பின் மூலம் வழங்குங்கள்.

 

நமது கோட்டகுப்பம் முன்பு திண்டிவனம் பாராளுமன்ற தொகுதியில் இணைத்து இருந்த போதும் சரி இப்போது புதிதாக விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இணைத்து இருபதாலும் சரி நமது ஓட்டை வாங்கி ஜெயித்து செல்லும் வேட்பாளர் நமதூர்க்கு இது வரை பெயர் சொல்லும் அளவுக்கு செய்தது கிடையாது.

 

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாடு திட்டத்தில் இது வரை கோட்டக்குப்பத்தில் பொதுமக்கள் பேருந்து நிழல் குடை கூட கட்டி கொடுக்கவில்லை.

 

இப்படி பட்ட வேட்பாளர் நம்மிடையே ஒட்டு கேட்டு வரும் போது, ஜெயித்தால் கோட்டகுப்பத்துக்கு என்ன செய்வீர்கள் என்று கேளுங்கள்.

 

ஏற்கனவே நமது வானூர் சட்டமன்ற தொகுதி சுதத்திரம் வாங்கினது முதல் தனி தொகுதியாக இருந்து வருவதால் நமதுரை சேர்த்தவர்கள் தேர்தலில் போட்டி யிட முடியாமல் உள்ளது.

 

மேலும் தற்போது விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியும் தனி தொகுதியாய் இருப்பதால் யாரு வந்தாலும் நமதுருக்கு விடிவு காலம் கிடையாது.

 

 

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கட்சியைப் பார்த்து ஓட்டுப் போடுவதா அல்லது வேட்பாளரைப் பார்த்து ஓட்டுப் போடுவதா என்பது. இதற்கு பதில் இரண்டுமே சம அளவில் முக்கியமானது என்பதுதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எம்பியின் கட்சியே மத்தியில் அரசு அமைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அவர் எதிர்கட்சியாக உட்காரவும் நேரலாம். ஆனால் அவர் தன் வேலையின் ஒரு பகுதியாக நமது தொகுதிக்கு நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய முடியும்.

 

அதற்கு அவர் தொகுதிக்கு வந்து போகிறவராக இருக்க வேண்டும். நமது பிரச்னைகளை அறிந்து கொண்டிருப்பவராக அவற்றைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டவராக இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் நின்றால் கட்சி விருப்பு தாண்டி அவருக்கு வாக்களிப்பதே நல்ல முடிவாக இருக்க முடியும்.

 

வேட்பாளரின் படிப்பு, அவர் இதற்கு முன்பு செய்திருக்கும் சமூகப் பணிகள் வகித்த பதவிகள் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அத்தனையையும் கணக்கில் கொள்ளவும்.

 

அதாவது நீங்கள் விரும்பும் கட்சி மோசமான வேட்பாளரை நிறுத்தினால் அவரை ஒதுக்குங்கள். அல்லது உங்களுக்கு பிடிக்காத கட்சி உங்கள் இடத்தில் யாரேனும் நல்ல ஆள் ஒருவரை நிறுத்தினால் அவரை ஆதரிப்பதைப் பற்றிப் பரிசீலிக்கங்கலாம்.

 

அடுத்து தொகுதியில் யாருமே தகுதியான வேட்பாளர்கள் இல்லை, அதனால் ‘நோட்டா’ (NOTA – None Of The Above) எனப்படும் 49-ஓ போடுவது பற்றிய கேள்வி. ‘நோட்டா’ எவ்வளவு பதிவானாலும் மீதமிருக்கும் ஓட்டுகளை வைத்து அதிக வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். பிறகு ‘நோட்டா’ போட்டும் என்ன பயன் என்பதே பரவலாக இருக்கும் அந்தக் கேள்வி.

 

நீங்கள் சொல்லும் விஷயம் உண்மையே. ‘நோட்டா’வினால் நேரடி ஆதாயம் ஏதும் இல்லை தான். ஆனால் அதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவெனில் இருக்கும் அத்தனை வேட்பாளர்களும் தகுதியற்றவர்கள் என இத்தனை சதவிகிதம் பேர் நினைக்கிறார்கள் என்கிற முக்கியமான தகவல்.

 

ஒருவேளை அந்த எண்ணிக்கை கணிசமான சதவிகிதம் எனில் கட்சிகள் அடுத்து வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும். ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என மக்களிடமிருந்து அறிய முயலும். இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்.

 

இதுவரை நடந்த எந்த தேர்தலையும் போல் அல்லாது இம்முறை ‘நோட்டா’ பதிவு செய்வது எளிமையானது, ரகசியமானது. அதனால் முன்பை விட அதிக ‘நோட்டா’ பதிவாக வாய்ப்பு உள்ளது. கட்சிகளே இதை உணர்ந்து தான் இருக்கின்றன.

 

அதனால் தகுதியான வேட்பாளரே இல்லை எனும் பட்சத்தில் ‘நோட்டா’ போடத் தயங்காதீர். ஜனநாயகத்தில் மாற்றம் விரைவில் வராதுதான். ஆனால் வரும்.

Advertisements