தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்


police

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அமைதியாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று புதுவை வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

 

கூட்டத்திற்கு வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் திரிபாதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோட்டக்குப்பம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா சேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன், பாஸ்கரன், ரகுநாத் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபானங்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகமாக இருக்கும். அதனை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்வது? சில ரவுடிகளை கைது செய்ய தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது? என்பது குறித்தும், ரவுடிகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

source:dailythanthi