ஆடு நனைகிறது என்று ஓனான் அழுகின்றது…


ஆடு நனைகிறது என்று ஓனான் அழுகின்றது…..

 


இந்த பழமொழி யாருக்கு பயன்படுதோ இல்லையோ, ஊரை இது நாள் வரை பாரம்பரியம் என்ற பெயரில் பாழ்படுத்தும் கும்பலுக்கு கண்டிப்பாக பயன்படும்.

 

பொய் சொல்வதையே குறிகோளாக கொண்டவர்கள் சொல்வது போல் இல்லாமல், கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜிதுக்கு இதற்கு முன்பு நிர்வாக தேர்தல் நடைபெறாமல் இல்லை, உண்மையில் தேர்தல் நடைபெற்று பொது மக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு நல்ல நிர்வாகத்தை தேர்தெடுத்தார்கள். இந்த உண்மையை ஊரின் நலனில் உண்மையுள்ள பாரம்பரியம் மிக்கவர்களை கேட்டு தெரிந்து கொள்ளவும்.

 

ஜாமியா மஸ்ஜித் புதிய நிர்வாகம் அமைக்க புதிதாக அட் ஹக் கமிட்டி அமைக்கப்பட்டதை கிஸ்வா வரவேற்றது . அப்போது கோட்டகுப்பம் நிர்வாக சபைக்கு புதிய நேர்மையான நிர்வாகம் எப்படி அமைய வேண்டும் என்று உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சகோதர்களின் ஆலோசனையை  ஏற்று கிஸ்வா உறுபினர்கள் பொதுமக்களுடன் இணைந்து அட் ஹக் கமிட்டியிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.

 

அப்போது ஊரை நிர்வாகிக்கும்  தெரு  நிர்வாகிகளை நேரடியாக  ஒவ்வொரு தெருவாக  சிரத்தை மேற்கொண்டு நேரில் போய் பொதுமக்களுடன் கருத்து கேட்டு பின்பு தேர்வு செய்ய வலியிருதினோம், மேலும் நியமன உறுப்பினர் ஒரு மோசமான வழியை கொண்டு இது நாள் வரை நிர்வாகம் நடைபெற்று வந்ததை சுட்டி காட்டி,  இனி  தெரு நிர்வாகிகள் இருந்து தலைவர்,செயலாளர்,  பொருளாளர் மற்றும் பஞ்சயத் கமிட்டி உறுபினர்களை தேர்வு செய்ய சொன்னோம், அப்போது உங்கள் கோரிக்கையை ஏற்று அதே போல் செய்கிறோம் என்று உறுதி கூறி பின்னர் நடைபெற்ற சீர்கேடுகள் என்ன என்று பொது மக்கள் உங்களுக்கே தெரியும்.

 

20140127-091436.jpg

(மேலே உள்ளது : ஊர் மானத்தை  கப்பல் ஏற்றிய பிட் நோட்டீஸ் )

 

 

கோட்டகுப்பம் வரலாற்றில் இல்லாத வகையில் அரசியலை விட கேடுகெட்ட தனமாக ஒரு கும்பல் தெரு நிர்வாகிகளை ஒரு விட்டிற்கு வர வழைத்து அவர்களுக்கு நிர்வாக சபையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லிகொடுத்து, தாங்கள் விரும்பும் நபரை தலைவராக வர வைக்க செய்த அசிங்கங்களை பொதுமக்கள் அவ்வளவு சிக்கிரம் மறந்து விட வில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் தேர்தல் அறிவிப்பைபார்த்து பக்கத்து ஊர்காரர்கள் எல்லாம் எள்ளிநகையாடியதும் ஏளனம் செய்ததையும் இவர்களால் மறக்கமுடியலையாம். நீங்கள் செய்த அசிங்கத்தை வெளியூர் மக்கள் எப்படி நினைத்து இருப்பார்கள். ஊரையை பதவி வெறியில் கேவல படுத்தியதை இனி காலம் காலம் யாரும் மறக்க மாட்டார்கள்.

 

 

அடுத்த நாள் நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தில் தாங்கள் நினைத்தது போல் நியமன உறுப்பினரை தேர்தெடுத்து கொண்டு அவரையே தலைவராக அறிவித்து உள்ளனர். பாரம்பரியம் பேசும் இவர்கள் இது நாள் வரை நிர்வாகம் எந்த பாரம்பரியத்தில் தேர்தெடுக்க பட்டது என்று வசதியாக மறைத்து கொண்டு நிர்வாகிகள் தேர்வை பொதுமக்களுக்கு அறிவிக்காமல் தங்களது குடும்ப இணையத்தளத்தில் வெளியிட்டு பொது மக்களை ஒன்றும் தெரியாதவர்களாக  ஆக்கியதை நீங்கள் மறக்கலாம், பொது மக்கள் மறக்க வில்லை.

 

இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால் பொதுமக்கள் சொன்னதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் அட் ஹக் கமிட்டி உறுபினர்கள்  சிறு கும்பல் பேச்சை கேட்டு கொண்டு நிர்வாகத்தை தேர்தெடுத்து தான், இதை சுட்டி கட்டி அவர்களிடம் கேட்டதற்கு எங்கள் வேலை 29 தெரு நிர்வாகிகளை கை காட்ட  தான், அந்த வேலை முடிந்து விட்டது அதற்கு அப்புறம் நடைபெற்றதற்கு எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி கொண்டார்கள்.

 

 

 

20140207-162718.jpg

( மேலே உள்ளது : அட் ஹக் கமிட்டிக்கு கிஸ்வா வைத்த கோரிக்கை )

 

பதவி அசை யால் சில பேர்களை கொண்டு அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. ஊரின் நலன் முக்கியம் என்று இப்போது புலம்பும் நீங்கள் அன்று பொதுமக்கள் கேட்டதற்கு பிறகும் ஏன் நியமனம் உறுப்பினரை தேர்தேடுதிர்கள், இன்றைய ஊரின் நிலைக்கு உங்கள் பதவி ஆசையே காரணம்.

 

 

 

கிஸ்வா என்றைக்கும் பதவிக்கு ஆசைப்படவில்லை, கிஸ்வா வெளியிட்ட நிர்வாகிகள் எத்தனை பேர் கிஸ்வா உறுப்பினர் என்று கட்ட முடியுமா. நிர்வாகிகள் தேர்வில் அதிருப்தி உள்ளதை சுட்டிக்காட்டியதை தொடந்து கிஸ்வா உறுப்பினர் ஒருவரை சேர்த்தல் பிரச்னை பண்ண மாட்டார்கள் என்று நினைத்து ஒருவரை சேர்த்து வெளியிட்டார்கள். கிஸ்வா பதவிக்காக போராடவில்லை, நியமன உறுப்பினர் என்ற போர்வையில் குளறுபடியாக சிலர் உள்ளே வர வேண்டாம் என்று தான் இது வரை போராடி வருகிறோம். விதிவிலக்காக  மார்க்க அறினர்களை மட்டுமே நியமன உறுபினராக வர வேண்டும்.

 

20140202-120415.jpg

( மேலே உள்ளது : கிஸ்வா அறிவித்த நிர்வாக குழு  )

 

100 சதவிகித மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிர்வாக சபையையோ எந்த காலகட்டத்திலும் அமையாது அதே போல் 50 சதவிகிதத்துக்கு மேல் மக்கள் வெறுக்கும் நிர்வாகம் நிலைக்காது என்பதற்கு இப்போதைய நிகழ்வே சாட்சி.

 

 

ஊரின் மீது இருந்து பிடிப்பின் காரணமாகவே தேர்தல் முறையை எதிர்த்து  வந்தோம், ஆனால் பதவி ஆசையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அலையும் கும்பலை அரசின் வக்ப் வாரியம் மட்டுமே அடக்கும், கிஸ்வா என்றைக்கும் தேர்தலுக்கு ஆதரவு கொடுத்தது கிடையாது. குரல் வாக்கெடுப்பு முலம் நிர்வாகிகளை தேர்வு செய்யலாம் என்பதே கொள்கை, ஆனால் பதவி வெறி கொண்ட கும்பல் செய்த செயலால் வக்ப் வாரியம் முடிவுக்கு கட்டுபடுகிறோம்.

 

 

தேர்தல் முறையில் 2008 யில் ஊர் அல்லோலபட்டது என்று புலம்பும் கும்பலே, அதற்கு அப்புறம் கோட்டக்குப்பத்தில் தேர்தலே நடைபெற வில்லையா, பேரூராட்சி தேர்தலில் நீங்கள் நிறுத்திய மக்கள் செல்வாக்கு பெற்ற வேட்பாளர்கள் பணம் பால் கொடுத்து கூட டெப்பாசிட் வாங்க வில்லை என்பதை மறந்து விட்டிர்களா, தேர்தலுக்கு அப்புறம் ஊர் நிம்மதியாக இல்லையா.

 

மடியில் கணம் இல்லாதவர்களுக்கு வழியில் பயம் இருக்காது, மக்கள் செல்வாக்கு உங்களுக்கு இருந்தால் தேர்தலில் நின்று ஜெயித்து ஜெயித்து நிர்வாகியாக வாருங்கள். அதை விட்டு பின் வாசல் வழியாக ஏன் நிர்வாகத்துக்கு வர நினைகிரீர்கள்.

 

 

 

இறைவன் அருளால் ஊர் நல விரும்பிகளால் பெரும் முயற்சி முலம் நீதி மன்றம் வக்ப் வாரியம் முலம் தேர்தல் நடத்த உத்தரவு வந்துள்ளது. பதவி அசை இல்லாத ஊர் நலனை மட்டுமே குறிகோளாக கொண்ட கிஸ்வா பொதுமக்களுடன் இணைந்து நல்ல நிர்வாகம் வர பாடுபடுவார்கள்.

 

 

இனி வரும் காலங்களில் நிர்வாகிகளை தேர்வு முறையை தேர்தல் இல்லாமல் பொதுமக்கள் விரும்பும் தெரு நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களில் ஒருவரையே தலைவர் மற்றும் அணைத்து பதவிகளுக்கும் வர வேண்டும். இனிமேலாவது நிர்வாக உறுப்பினர் தேர்வை முற்றிலும் ஒழித்து நேர்மையான நிர்வாகம் வர கிஸ்வா பாடுபடும்.

 

 

வக்ப் வாரியம் பள்ளிவாசல் நிர்வாகத்தில் வருவதால் ஏற்படும் நன்மைகள் :

 

 

1. பள்ளிவாசல் பேஷ் இமாம், மோதினார் தொடங்கி பள்ளிவாசலில் வேலை செய்யும் அனைவருக்கும் நியாயமான சம்பளம் கிடைக்கும்.

2. அவர்களுக்கு பென்ஷன் மற்றும் அரசின் அணைத்து சலுகைகள் கிடைக்கும்.

3. பள்ளிவாசல் சொத்தை அபகரிதர்வர்களிடம் உள்ள சொத்தை வக்ப் வாரியம் திரும்ப பெரும்.

4. குத்தகை மற்றும் வாடகை தரதவர்களிடம் இருந்து சொத்தை திரும்ப பெறப்படும்.

 

 

கடைசியாக மீண்டும் மீண்டும் கிஸ்வா சொல்லிகொள்வது என்ன வென்றால் தேர்தல் நிலை பாடுக்கு எங்களுக்கு விருப்பம் இல்லை, பதவி வெறி கொண்ட கும்பல் செய்த செயலால் இன்று தேர்தல் வந்துள்ளது.அதை பொதுமக்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி வருங்காலத்தில் இது போல் தேர்தல் வாராமல் பொதுமக்களுடன் இணைந்து கிஸ்வா உறுப்பினர்கள் பார்த்து கொள்வார்கள்.

 

 

பள்ளிவாசல்  பதவியில் இருந்துகொண்டு அனுபவித்த சலுகை தொடர வேண்டும் என்று நினைந்து கொண்டு ஊரையும் மக்களையும் இந்த அளவுக்கு ஆக்கியவர்களிடம்  இருந்து நமதூரை இறைவன் காத்தருள்வானாக! ஆமீன்!

 

 

Advertisements