துபாய் சகோதரரின் ஆதங்கமான கேள்வி ?


 20140210-193242.jpg

Sans titre

துபாயில் இருந்து நமதூர் சகோதரர் ஜனாப். மன்சூர் அவர்கள் ஒரு புகைப்படத்துடன் செய்தி அனுப்பி அதை பொதுமக்களுக்கு தெரிவிக்க விருப்பம் கொண்டுள்ளார்.

சகோதரர் ஜனாப். மன்சூர் அவர்கள்  அனுப்பிய செய்தியில் இருந்த சில வரிகளை நீக்கிவிட்டு பொதுமக்களின் பார்வைக்கு தருகிறோம்.

 

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

இன்று 10/02/2014 அன்று வெளிவந்த மணிச்சுடர் நாளிதழை இணையத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

 

சமிபத்தில் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரான வடக்கு கோட்டையார். வ. மு. செய்யத் அஹ்மத் அவர்களின் மறுமை வாழ்வுக்காக திரு குரான் ஓதி துவா கேட்கும் நிகழ்ச்சி கோட்டகுப்பம் ரப்பானிய பெண்கள் மதரஸாவில் நடந்துள்ளது.

 

மரணம் அடைந்தவர்களுக்கு துவா ஓதுவதில் தப்பு கிடையாது, ஆனால் அதை முஸ்லிம் லிக்கை சேர்ந்தவர்கள் மதரஸாவில் ஓதும் பெண்களை வைத்து துவா ஓதி அவர்களை முகம் தெளிவாக தெரியும் அளவில் புகைப்படம் எடுத்து தங்களது கட்சியின் தலைமைக்கு அனுப்பி அதை பலர் பார்க்கும் ஒரு பத்திரிகையில் வெளியிட்டது கண்டிக்க வேண்டிய செயல். இந்த புகைப்படத்தை அந்த பெண்களில் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் பார்க்க நேர்ந்தால் என்ன நினைப்பார்கள். வயதுக்கு வந்த பெண்களின் புகைப்படத்தை வெளியிடும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது. மதரஸாவில் ஓத அனுப்பும் பெண்களை வைத்து அரசியல் செய்து தங்கள் கட்சி தலைமையிடம் நல்ல பெயர் வாங்கும் செயலை  அணைத்து பெற்றோரும் கண்டிக்க வேண்டும்.

 

இதே போல் சமிபத்தில் முஸ்லிம் லிக் சார்பில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்துக்கு அல் ஜாமியதூர் ரப்பானிய அரபி கல்லூரியில் இருந்து மாணவர்களை அழைத்து சென்றனர்.

 

ஆண்கள் அரபி கல்லூரியையும், பெண்கள் மதரஸாவையும் முஸ்லிம் லிக் கட்சி தங்கள் அரசியல் பயன்பாட்டுக்காக பயன் படுத்துவதை பொதுமக்களும் இளைஞனர் அமைப்புகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.

 

இந்த புகைபடத்தில் உள்ள பெண்களின் முகத்தை மறைத்து கோட்டகுப்பம் இணையத்தளத்தில் செய்தி வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

Advertisements