கொசுவை ஒழிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்


20140204-192339.jpg

கோட்டகுப்பம் பேரூராட்சி துப்பரவு பணியாளர்கள் சரி வர ரோடு ஓரத்தில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்வது கிடையாது. அப்படியே சுத்தம் செய்தாலும் அதன் சேற்று மண்ணை அப்புற படுத்தாமல் ரோடு ஓரத்தில் ஒதிக்கி வைத்து சென்று வேண்டுகின்றனர். சாலையில் போகும் வாகனத்தால் மீண்டும் மண் சாக்கடையை அடைத்து கொசு உற்பத்தி பண்ண வழி ஏற்படுகிறது. பேரூராட்சி  நடவடிக்கையின்மையால்,கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் டெங்கு, மலேரியா, சிக்-குன் குனியா  உருவாகும் பீதியில் மக்கள் உள்ளனர்.  பேரூராட்சி பணியாளர்கள்  வீடுகள் தோறும் சென்று தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் “அபேட், டெமிபாஸ்’ கரைசல் ஊற்றுவது, மாலையில் டீசல் கலந்த பைரித்ரம் மருந்தை, புகை மருந்தாக அடிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். பேரூராட்சி  துப்புரவு பணியாளர்களை கொண்டு, ஆங்காங்கு கொட்டி கிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் பை, தேங்காய் சிரட்டை, டயர் முதலியவற்றை அகற்ற வேண்டும்.ஆனால் இந்த பணி நடக்கிறதா என்றால், அதுவும் கேள்விகுறியே. தற்போது இரவில் ஒரளவு குளிர் நிலவுவதால்,மறைந்திருந்த கொசுக்கள் ஆட்டம் போட துவங்கி விட்டன. இதனால் பலரும் கொசுகடிக்கு ஆளாகி,நோய்களால் பாதிக்கும் நிலை தொடர்கிறது. முன்னெச்செரிக்கையாக, வரும் முன் நடவடிக்கை எடுக்கா விட்டால், கொசுக்களால் உருவாகும் காய்ச்சலை தடுக்க முடியாது. ஆரம்பத்திலே கொசு உற்பத்தியை ஒழிக்க, பேரூராட்சி  நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் கொசு மருந்து அடிக்கும் பணியை பேரூராட்சி முடக்கி விட பொதுமக்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.

 

மக்களே கொசுவை விரட்ட சில வழிகளை பயன்படுத்தலாம்

 

 

– பொது மக்கள் தங்கள் விடுகளை சுற்றி  சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் 

 

– மாலை நேரத்தில் தேங்காய் நார்களை  நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது.

 

– கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

– மண்ணெண்ணெய் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

Advertisements