அட்டக் கமிட்டிக்கு விளக்கம் அளிக்க கிஸ்வா கோரிக்கை !


20140127-091421.jpg

 

சமிபத்தில் கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக கமிட்டி முடிந்து புதிய நிர்வாகம் அமைக்க அட்டக் கமிட்டி அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

 

நேற்று 26/01/2014 அன்று ஜாமியா மஸ்ஜிதில் கூடிய அட்டாக் கமிட்டி முலம் தங்கள் தேர்ந்தெடுத்த நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் நிர்வாக தலைவராக ஜனாப். எசனுல்லாஹ் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்று தெரிய வந்தது.

 

ஆனால் அதன் விபரம் அதிகார பூர்வமாக பொதுமக்களுக்கு அறிவிக்கும் முன்னரே, ஒரு கட்சியின் இணையத்தளத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டதாக ஒரு பட்டியலை புகைப்படத்துடன் வெளியிட்டு பொதுமக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தனர். (இன்று அது நீக்க பட்டது)

 

ஆனால் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தங்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சுமார் 22 மேற்பட்ட தெரு நிர்வாகிகளுக்கு ஒரு சிறு பிட் நோட்டீஸ் கொடுத்து அதில் உள்ள பெயரை சொல்லும் போது கையை தூக்கி நியமனம் உறுபினராக தேர்ந்து எடுத்துள்ளனர். இந்த அசிங்கமான செயல் கோட்டகுப்பம் வரலாற்றில் நடைபெற்றதாக சரித்திரம் இல்லை.

 

20140127-091436.jpg

மேலும் இது நாள் வரை தெரு நிர்வாகிகள் பெயரை ஒரு வாரத்துக்கு பள்ளிவாசலில் ஒட்டி அதில் ஆட்சேபனை இல்லாமல் இருந்தால் மட்டுமே, நிர்வாக சபை முலம் தேர்வு செயப்பாட்டு நிர்வாகிகளாக அறிவிக்க படுவார்கள். நேற்று ஒரே நாளில் அனைத்தும் நடந்து முடித்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

இது சம்மதமாக நேற்று 26/01/2014 இரவு விளக்கம் கேட்டு கோட்டகுப்பம் கிஸ்வா அமைப்பினர் அட்டக் கமிட்டி உறுபினர் அனைவரையும் சந்தித்தனர், அவர்கள் இன்று ஜாமியா மஸ்ஜிதில் விளக்கம் அளிப்பதாக சொல்லி இருந்தனர்,

 

அதன் படி இன்று 27/01/2014 காலை சுமார் 80 க்கு மேற்பட்ட பொதுமக்களுடன் கிஸ்வா அமைப்பினர் ஜாமியா மஸ்ஜிதுக்கு முன் திரண்டனர், அவர்களை சந்தித்த முத்தவல்லி ஜனாப். எசனுல்லாஹ் அட்டக் கமிட்டி உறுபினர்கள் சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் வராததை சுட்டி காட்டி, கிஸ்வா  அமைபினருக்கு பின்னர் விளக்கம் தருவதாக உறுதி அளித்தார், மேலும் நேற்று அமைக்க பட்ட நிர்வாக உறுபினர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார், அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்

நமதுருக்கு ஒரு நல்ல நிர்வாகம் வர கிஸ்வா பாடுபடும் என்று பொதுமக்களுக்கு இதன் முலம் உறுதி கூறுகிறோம், எங்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

 

 

Advertisements