அட்ஹாக் கமிட்டி உறுபினர்களுக்கு உள்ளூர் மக்களின் வேண்டுகோள்…


703896_316830411763300_1051654398_o

 

கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக சபையின் ஆட்சி காலம் முடித்து புதிய நிர்வாக சபை தேர்ந்தெடுக்க புதிய அட்ஹாக்  கமிட்டி அமைத்துள்ளதை யாவரும் அறிவோம். நமதுரின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சகோதர்கள் நமது இணையதளத்துக்கு மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக சில ஆலோசனைகள் மற்றும் கோரிக்கை வைத்து உள்ளனர், உலகெங்கும் வாழும் நமதூர்  சகோதரர்களின் கருத்தை நாம் சாதாரணமாக நினைக்க முடியாது.

 

அவர்கள் அனைவரும் இதயபூர்வமாக ஊரில் அமைதி நிலவ வேண்டும் என்றும், முடங்கிப் போகாத , செயல்பாடு உள்ள,  ஊரை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கின்ற புதிய நிர்வாகம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். ஊரின் ஒவ்வொரு தேவைக்கும், முன்னேற்ற திட்டங்களுக்கும் எந்த அளவுக்கு வெளிநாடுகளில் வாழும் சகோதரர்களின் ஆதரவு தேவைப் படுவது நியாயமோ அந்த அளவுக்கு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும் நமது கடமை .  அதை அட்ஹாக் கமிட்டி உறுபினர்களுக்கு தெரிய படுத்த வேண்டி நமது இணையத்தளத்தில் வெளியிட்டதன் முலம் அவர்களுக்கு தெரிய படுத்துகிறோம்.

 

ஒரு காலத்தில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த நமது ஜமாஅத் நிர்வாகத்தில்  அரசு துறைகள் குறிப்பாக காவல் துறை கூட நுழைய பயந்த காலமும் உண்டு. மற்ற ஊர் ஜமாஅத் பிரச்சனைகள் மட்டும் இல்லாமல் அருகே உள்ள மீனவ மக்களின் பிரச்னைகளை போக்க ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் சமாதானம்  செய்கின்ற மத்தியஸ்தராக செயல்பட்ட காலமும் உண்டு.

 

முன்னர் நமதூரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் முலம் பொது மக்கள் நேரடியாக தமது தெரு பிரதிநிதிகளை தேர்ந்து எடுத்து வந்தனர். அவர்கள் முலமாக நியாமான நிர்வாகிகள் முலம் நமதுரின் நிர்வாகம் நடைபெற்று வந்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர் அட்ஹாக் கமிட்டி முலம் நிர்வாகிகள் வர ஆரம்பித்தார்கள், அதன் தொடர்ச்சியாக இந்த முறையும் நிர்வாக சபை தேர்ந்து எடுக்க பட உள்ளது. கமிட்டி அமைக்கும் நேரத்தில் ஆரம்பித்து நிர்வாக சபை தேர்தெடுக்கும் வரை பொது மக்களுக்கு நேரடி பங்கு கிடையாது. கமிட்டி தெருவாரியாக ஒருவரை பரிந்துரைக்கும், பரிந்துரைத நபர்  எந்த விதத்தில் தேர்வு செய்யபட்டார் அல்லது அதே தெருவில் வேறு நபர் ஏன் நிராகிகபட்டார் என்பது எல்லாம் பொதுமக்களுக்கு தெரிவிப்பது கிடையாது. இப்படி தேர்ந்தெடுக்க பட்ட நிர்வாகி பொதுமக்களிடம் இருந்து தலை கட்டு வசூலிக்கவும், சர்க்கரை சோறு விநியோகிக்கவும் தான் பயன் படுத்த படுகிறார்கள்.

 

ஊரை நேரடியாக நிர்வாகிக்கும் நிர்வாகி பொதுமக்கள் முலம் தேர்ந்து எடுக்க படுவது இல்லை, அட்ஹாக் கமிட்டி முலமாகவும் பரிந்துரைக்க படுவது இல்லை, பின்னர் யார் ஊரை நிர்வாகிப்பது, ஊரை நிர்வகிக்கும் தலைவர்கள்  தங்களது செல்வாக்கை பயன் படுத்தி  பின் வாசல் வழியாக நியமன உறுபினர் என்ற ஒரு சந்தின் வழியாக நிர்வாகத்துக்கு வருகிறார்கள்.

 

கிராம சபை, உள்ளாட்சி, மாநிலம் முதல் மத்தியில் ஆட்சி அதிகாரம் எல்லாம் தேர்ந்து எடுக்க பட்ட பிரதிநிதிகளில் இருந்து ஒருவர் தான் நிர்வாகியாக அதாவது பேரூராட்சி தலைவர், மாநில முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வரை எல்லாம் பிரதிநிதிகளில் இருந்து வருகிறார்கள். நமதூர் நிர்வாகத்துக்கு மட்டும் அட்ஹாக் கமிட்டி தேர்ந்து எடுத்த நபர்கள் அல்லாமல் வேறு வழியில் நிர்வாகத்தில் நுழைகிறார்கள். இந்த போக்கை தான் பலரும் எதிர்த்து வருகிறார்கள். நமதுருக்கு நல்ல நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் வர வேண்டும் என்றால் ஒன்று தேர்தல் முலம் வர வேண்டும் இல்லை என்றால் அட்ஹாக் கமிட்டி உறுபினர்கள் நேரடியாக தெருவில் இருக்கும் நபர்களில் இருவரை தேர்ந்து எடுத்து அவர்களில் யார் நேர்மையானவர் என்று பார்த்து ஒருவரை தேர்ந்து எடுக்க வேண்டும்.மேலும் அணைத்து தெரு நிர்வாகிகள் கூடி அவர்களில் இருந்து ஒருவர் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் பஞ்சயத்து கமிட்டி தலைவர் என்று தேர்ந்து எடுக்க வேண்டும். இதன் அடிபடையில் வரும் ஒருவரை பொது மக்கள் அனைவரும் ஆதரிப்பார்கள். மேலும் நியமன உறுபினர் என்று யாரும் உள்ளே வர கூடாது. தேவை ஏற்பட்டால் மார்க்க அறினர்கள் நியமன உறுபினராக தேர்ந்து எடுக்க லாம்.

 

புதிய நிர்வாகம் எப்படி இருந்தால் நன்மைத்தரும் என்கிற ஆலோசனையை  அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மட்டும் சேவையாற்றும் துடிப்பான புதிய நிர்வாகமே இன்றைய இன்றியமையாத் தேவை. 

 

 

  • எப்போதும்போல் அரைத்த மாவையே அரைக்காமல், ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காக சிந்தித்து, திட்டமிட்டு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 

  • நமதூரில் மறைந்திருக்கும் மனிதவளத்தை வெளிக்கொணர்ந்து அனைத்து வகையான முன்னேற்றத்திற்கும் முயற்சிக்கலாம்.

 

  • தமிழகத்தின் தலைச்சிறந்த முன்மாதிரி ஜமாஅத்களின் வெற்றிப்பாதையை நாமும் பின் தொடரலாம்.

 

  • ஊர் நிர்வாக சபையை பல்வேறு துறைகளாகப் பிரித்து ஒவ்வொருத் துறையும் போட்டிப் போட்டுக் கொண்டு சிறப்பாக செயலாற்ற வகை செய்யலாம்.

 

  • திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள சில உறுப்பினர்களை மட்டும் நியமித்துவிட்டு மற்றவர்களை இன்னபிற துறைகளை கவனிக்க ஏற்பாடு செய்யலாம்.

 

  • நிதித்துறை (நவீன பைத்துல் மாலுடன் கூடியது)

 

  • நீதித்துறை (மார்க்க அறிஞர்களையும் உள்ளடக்கியது)

 

  • கல்வித்துறை (மதரஸா, நிஸ்வான் மத்ரஸா மேம்பாடு)

 

  • பராமரிப்புத்துறை (பள்ளிவாசல்கள், ஷாதிமஹால் மற்றும் நிர்வாகத்திற்குட்பட்ட கட்டிடங்களைப் பராமரித்தல்)

 

இன்னும் இதுபோன்ற அத்தியாவசியமானத் துறைகளை உருவாக்கி அதற்கானப் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து உத்வேகத்துடன் சிறப்பாக செயல்பட வகை செய்ய வேண்டும். இதற்கான நிதியாதாரம் ஒரு பெரிய விஷயமே அல்ல. தொண்டாற்ற இளைய தலைமுறையினர்  தயார் என்றால் அதற்காக நிதியுதவி செய்ய உலகெங்கும் வாழும் ஊர் சொந்தங்கள் தயாராக உள்ளார்கள்.

 

 

 

நிர்வாகசபைக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். புதியவர்கள்தான் பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடம் இல்லை. யார் பொறுப்பேற்கப் போட்டியிடப் போகிறார்கள் என்பதைவிட ஊர் மேம்பாட்டிற்காக என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். தொலைநோக்குப் பார்வையுடைய நல்லவர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட முயற்சிக்க வேண்டியது ஜமாஅத் உறுப்பினர்களான நம் ஒவ்வொருவர் மீதும் கடமை. அதற்காக முழுமையாக முயற்சிப்போம். அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். இன்ஷா அல்லாஹ், நமதூரில் இது நாள் வரை இல்லாமல் இருந்த  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை சகோதரத்துவம் நமது ஊருக்கு மீண்டும் வர வேண்டும். இருண்ட தற்கால சூழலிலிருந்து மீண்டு வர வேண்டும்.

 

 

இன்ஷா அல்லாஹ், நமதூரில் இது நாள் வரை இல்லாமல் இருந்த  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை சகோதரத்துவம் நமது ஊருக்கு மீண்டும் வர வேண்டும். இருண்ட தற்கால சூழலிலிருந்து மீண்டு வர வேண்டும். காலம் கனிந்திருக்கிறது. கனிந்துள்ள காலத்தை எல்லா வகையிலும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு மனப்பாண்மை வேண்டும்.கசப்பான நிகழ்வுகளுக்கு விடை கொடுத்து, இனிப்பான நிகழ்வுகள் தொடர ஒன்றிணைவோம்.