தண்ணீர் இல்லாத தண்ணி தொட்டிக்கு பெயிண்ட் தேவையா


20131224-121041.jpg

 

கோட்டக்குப்பம் பேரூராட்சி நல்ல செயல்பாடுகளை பாராட்டும் அதே நேரத்தில் அவர்கள் செய்யும் மக்கள் விரோத செயல்களை பொதுமக்களுக்கு தெரியபடுத்த நாங்கள் என்றும் முயற்சி எடுப்போம். கோட்டக்குப்பம் முக்கிய பகுதிகளாக உள்ள பள்ளிவாசல் தெரு, நாட்டாண்மை தெரு மற்றும் ஹாஜி ஹுசைன் தெருக்களை உள்ளடக்கிய பகுதியில் பல ஆண்டுகளாக குடி தண்ணிர் போதிய வேகத்தில் விடுகளுக்கு கிடைக்காமல் இருந்து வந்தது. பழைய பேரூராட்சி தலைவர் ஹாமித் அவர்கள் நமது ஜாமியா மஸ்ஜித் கொடுத்த இடத்தில் ஒரு மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டி பொது மக்களின் பாராடுகளை பெற்றார். இந்த மகிழ்ச்சி கொஞ்ச நாட்களில் காணாமல் போனது. நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் தேக்காமல் அதை சும்மா காட்சி பொருளாக இருந்து வந்த தொட்டியில் தண்ணீர் ஏற்றி பொது மக்களுக்கு வழங்காமல், பயன் இல்லாமல் இருக்கும் தொட்டிக்கு  பெயிண்ட் அடித்து பொதுமக்களின் பணத்தை வினாகி வருகிறார்கள்.நடுநிலை வாதிகளின் சார்பாக நாங்களும் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

 

20131224-121048.jpg

Advertisements