Incredible India (Pondicherry) 2014


புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. புதுச்சேரியை மிகச் சிறந்த சுற்றுலா மையமாக மாற்றவும், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இதற்கு, மத்திய அரசும் உதவிக் கரம் நீட்டி உள்ளது. இதன் எதிரொலியாக, புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மிஞ்சும் வகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். டிசம்பர் மாதம் துவங்கி, பிப்ரவரி வரையிலும், ஜூனில் ஆரம்பித்து, ஆகஸ்ட் வரையிலும், புதுச்சேரிக்குச் சுற்றுலா சீசனாகும். குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களில், ஐரோப்பிய நாடுகளில் கோடைக் காலம் என்பதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் புதுச்சேரிக்கு வருகின்றனர். இதனால் கோட்டக்குப்பம் மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் நல்ல வருமானம் வருகிறது.