துண்டான கைவிரல்கள் இணைப்பு: PIMS மருத்துவமனையில் வெற்றி


20131203-131959.jpg

photo 5

 பிம்ஸ் மருத்துவமனையில் துண்டான கை விரல்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன.கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில், 38 வயதுள்ள நபர், வலது கையில், கட்டை விரல் தவிர மற்ற நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள், துண்டிக்கப்பட்ட விரல்களை இணைக்க முடிவு செய்தனர். பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் சரத் ராம்தாஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, துண்டிக்கப்பட்ட கைவிரல்களை வெற்றிகரமாக இணைத்தனர்.

பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது “” ஒருவரது கை, அல்லது விரல்கள் எதிர்பாரத விதமாக துண்டிக்கப்பட்டால் அருகில் உள்ளவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

துண்டித்து மண்ணில் கீழே விழுந்த உடலின் பாகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி அதனை ஐஸ் பெட்டியில் வைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும்.

துண்டிக்கப்பட்ட உறுப்புகளை 6 மணி நேரத்திற்குள் எடுத்து வந்தால் மட்டுமே மீண்டும் இணைக்க முடியும். நவீன மருத்துவ உலகில் இது சாத்தியமானது தான். துண்டிக்கப்பட்ட பகுதியில் ரத்தம் அதிகம் வெளியேறினால் அப்பகுதியை துணியினால் மூட வேண்டும். அந்த பகுதியில் எந்த தையலும் போட கூடாது. எந்தவித ரசாயனப் பொருட்களையும் வைக்கக் கூடாது” என்றனர்.

இதனா அவசியம் share பண்ணவும்.. 

photo 4source: dinamalar

Advertisements