RSS கண்காணிப்பில் கோட்டக்குப்பம்? – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் !!!


20131201-065749.jpg

கட்டுரை ஆக்கம் : ரியாஸ் அஹ்மத் (Riyaz Ahamed)

 

சுமார் 20000 முஸ்லிம்கள் வசிக்கும் கோட்டக்குப்பத்தில் கடந்த  16.11.2013 ஞாயிறு அன்று அன்னை பாரத மாதா சமூக சேவை என்ற நிறுவனத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட நபர்கள் டாட்டா ஏசி வாகனத்தில் வந்து கோட்டக்குப்பம் முஸ்லிம் பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் விநியோகித்து பணம், துணி, மற்றும் பழைய பொருட்களை வசூலித்துக்கொண்டிருந்தனர். இல்லை என்று சொல்பவர்களிடம் வலுக்கட்டாயமாக ஏதேனும் கொடுங்கள் என்று வற்புறுத்தி வாங்கிக்கொண்டிருந்தனர்.

 

இதை பற்றி தகவல் அறிந்த த.மு.மு.க வினர், பள்ளிவாசல் தெருவில் அவர்கள் வாகனத்துடன் இருப்பதை அறிந்து. சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு அவர்கள் RSS குறியீடான பாரத மாதா படம் பொறித்த பதாகையுடன் வாகனம் இருபதையும், அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வசூல் நடத்திக்கொண்டிருந்தனர். இதனை கண்ட த.மு.மு.க வினருக்கு பல்வேறு சந்தேகம் எழுந்தது.

 

 

சம்மந்தப்பட்டவர்களை அணுகி விசாரித்ததில் அந்நிறுவனம் சென்னை புறநகர் பகுதியான ரெட் ஹில்ஸ்-ல் இருப்பதும், கோட்டகுப்பதில் மட்டும் அவர்கள் 10 நாட்கள் தங்கி வசூலில் ஈடுபட இருப்பதும், கடந்த 6 மாததிற்க்கு முன்பு இங்கு வந்து சென்றதும். கோட்டகுப்பதில் உள்ள முஸ்லிம் பகுதியில் மட்டும் அவர்கள் வசூல் செய்ய அவர்கள் சார்ந்த நிறுவனம் அனுப்பியதாக தெரிவித்தனர். மேலும், காவல் நிலையத்தில் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை, ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்திலும் எந்த விதமான அனுமதியும் பெறவில்லை என்பது த.மு.மு.க வினர் விசாரித்ததில் தெரிய வந்தது.

 

 

இவர்களின் நடத்தையும், அணுகுமுறையும் சந்தேகத்தை எழுப்பியது. குறிப்பாக இவர்கள் முஸ்லிம் பகுதில் மட்டும் வசூலில் ஈடுபடுவதால் ஏதேனும் சதி நோக்கத்தில் தமிழகம் முழுவதும் முஸ்லிம் பகுதிகளில் உளவு பார்க்க வந்த RSS பயங்கரவாதிகளோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்ததை அடுத்து த.மு.மு.க வினர் கடுமையாக எச்சரித்தனர் பின்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, உடனடியாக காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர்.

 

 

சென்னை ரெட் ஹில்ஸ் பகுதி காவல் நிலையத்தை தொடர்புகொண்ட காவல் துறையினர், அன்னை பாரத மாதா சேவை நிறுவனத்தை பற்றி விவரம் கேட்டறிந்தனர். அவர்கள் அன்னை பாரத மாதா சேவை நிறுவனம் இருப்பதை உறுதி செய்ததை அடுத்து சமந்தபட்டவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். அந்நிறுவனம் இருப்பதை மட்டுமே அவர்கள் உறுதி செய்தனர் தவிர அவர்களின் பின்னணி மற்றும் செயல்பாடுகள் குறித்து அறியப்படவில்லை. இருபினும் இவர்கள் மீது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. காவல் துறையின் விசாரணை நமக்கு முழு திருப்தி அளிக்கவில்லை.

 

 

20131201-065757.jpg

 

சந்தேகத்துக்கான முக்கிய காரணங்கள் :

* காவல் நிலையதில் முறையான விவரங்கள் தெரிவிக்காமல் வெளியூரில் இருந்து வந்து 10 நாட்கள் தங்கி வசூலில் ஈடுபட இருந்தது.

* முஸ்லிம் பகுதியில் மட்டும் வசூல் நடத்த திட்டமிட்டது.

* வாகனத்தில் மற்றும் நோட்டீஸ்-ல் RSS குறியீடான பாரத மாத படம் பொரிக்கப்பட்டிருந்தது.

* ஒவ்வொரு வீட்டுக்கு உள்ளளே சென்று நோட்டம் விட்ட வண்ணம் துணிகளை சேகரித்து.

* 6 மாதத்திற்கு முன் ஒருமுறை கோட்டக்குப்பம் வந்து சென்றது.

 

20131201-065803.jpg

 

இதை மேலோட்டமாக பார்த்தல் இது ஒரு சேவை. அந்த தொண்டு நிறுவனம் செய்ததில் என்ன தவறு இருக்கும் என்று நீங்கள் வினவலாம். இதை பற்றி சற்று விரிவாகவும் ஆழமாகவும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

 

 

குஜராத் கலவரத்திற்கு 6 மாதத்திற்கு முன்பு முஸ்லிம் பகுதிகளில் (கோட்டக்குப்பத்தில் நடந்தது போன்று) குஜராத்தில் கணக்கெடுப்பு நடத்தபட்டு முஸ்லிம்கள் வலிமையற்ற பகுதிகள் அடையாளம் காணப்பட்டு பின்பு திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் கலவரத்தின்போது அந்த பகுதிகளில் தங்களின் வண்ம வெறியாட்டத்தை அரங்கேற்றினர் காவி பயங்கரவாதிகள்.

 

 

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. “இந்து தலைவர்கள் கொலை முஸ்லிம் தீவிரவாதிகள் சதி செயல்” என்று RSS, பாஜக, இந்து முன்னணி பழிபோடுவதும் அதை தலைப்பு செய்தி முதல் தலையங்கம் வரை அனைத்து பத்திரிக்கைகளும் ஓயாமல் எழுதிக்கொண்டிருந்தது. பிறகு இந்த சம்பவங்களில் உண்மை குற்றவாளிகள் முஸ்லிம்கள் இல்லை என்பதை போலீஸ் விசாரணையில் தெரிந்த பிறகும் அதை மீடியாவால் பெரிதாக எடுத்துக்கொள்ளபடாததும், மீடியா அதை இருட்டடிப்பு செய்வதும் பத்திரிக்கை தர்மத்தை குழிதோண்டி புதைக்கும் செயலாகவே இருந்துவருகிறது இந்த ஜனநாயக நாட்டில்.

 

 

இன்று நடு நிலையாக எந்த பத்திரிக்கையும் செயல்படுவதில்லை. இன்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளால் நடிகையின் தொடையும்; நரேந்திர மோடியின் நடையுமே தலைப்பு செய்திகளாக தரபடுகிறது. பாசிஸ்டுகளின் ஊதுகோலக செயல்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பத்திரிக்கைகளின் பங்கு பற்றி இவர்களுக்கு நாம் பாடம் நடத்த வேண்டும். “நேர்மை, துணிவு, தர்மம்” என்ன என்பதை பற்றி இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

 

 

ஏன் இந்த கொலைகள்? எதற்காக இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தபடுகின்றது? இதன் பின்னணி என்ன? என்பது பற்றி நாம் அறிப்படும்போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவருகிறது.

 

 

இஸ்லாத்தின் மாபெரும் எதிரிகளாக கருதபடுபவர்கள் யூதர்கள். இந்தியாவில் முஸ்லிம்களை கருவறுக்க துடிப்பவர்கள் ஆரியர்களான பார்பனர்கள். இந்த யூதர்கள் மற்றும் பார்பனர்களின் நோக்கம் ஒன்றுதான் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அழிக்கவேண்டும்.பல மதங்கள், சாதிகளை கொண்டு பன்முக சமூக முத்திரையோடு மதச்சார்பற்ற நாடாக இந்திய உலக அரங்கில் திகழ்து வருகிறது.இந்த நாட்டை இந்து நாடாக்க வேண்டும், முஸ்லிம்கள் உட்பட பிற மதத்தினர் இங்கு வாழ்ந்தால் இந்துக்களாக வாழ வேண்டும் இல்லையெனில் இரண்டாந்தர குடிமக்களாக வாழ வைக்க வர்நாசரம கொள்கை கொண்ட ராம ராஜ்யத்தை நிலை நாட்ட வேண்டும் என்று பாசிச பயங்கரவாதிகள் சுதந்திரத்திற்கு முன்பிலிருந்து செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

இந்த பாசிச பார்பனர்கள் இந்திய முழுவதும் இந்து சேவை அமைப்பு (RSS, VHP, இந்து முன்னணி, பஜ்ரங் தல்…) என்ற போர்வைக்குள் புகுந்து தங்களுக்கான ஒரு அரசியல் அமைப்பாக பாஜக (பாரதீய ஜனதா கட்சி) பின் நின்று இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்.சுதந்திரத்திற்கு பிறகு நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை அகற்றிவிட்டு தங்களின் கட்சியை இந்தியா முழுவதும் செல்வாக்கை பெற்று ஆட்சி அதிகாரம் பெற்று அதன் மூலம் நிரந்திர அரசை அமைத்து தங்களின் திட்டப்படி ராம ராஜ்யத்தை அமைப்பது. இதனை செயல்படுத்த கடந்த 85 ஆண்டுகளுக்கு மேலாக செயலாற்றி வருகிறார்கள். அவர்களின் திட்டதின் ஒரு பிரிவுதான் “DIVIDE AND RULE”(பிரித்தாளும் சூழ்ச்சி).

 

 

1992 டிசம்பர் 6 பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு அதன் தொடர்சியாக வட மாநிலங்களில் இந்து – முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி அங்கே சகோதர சகோதிரிகளாக இருந்த இந்து முஸ்லிம்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வட மாநிலங்களில் தங்களின் செல்வாக்கை உயர்த்திக்கொண்டு முதன் முதலாக 1998ல் ஆட்சியை பிடித்தார்கள்.

 

…..தொடரும்

Advertisements