கோட்டகுப்பத்தில் இளம் பிறை மாநாடு விளக்க கூட்டம் . . .


P1050988

 

வரும் டிசம்பர் 28-ம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற உள்ள இளம் பிறை மாநாடுட்டு விளக்க பொதுக்கூட்டம் கோட்டகுப்பம் முஸ்லிம் லீக் சார்பாக 23-11-2013 சனிக்கிழமை மாலை 6-00 மணிமுதல் கோட்டகுப்பம் பேரூராட்சி திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டாக்டர் இக்பால் பாஷா தலைமை தாங்க நகர தலைவர் இஹ்சானுல்லா, செயலாளர் முஹம்மது பாரூக், பொருளாளர் பிலால் முஹம்மது மாவட்ட இளைஞர் செயலாளர் அமீர் பாஷா உள்ளிட்ட முன்னனி உறுப்பினர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சிக்கு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அவர் தன் பேச்சில் இன்றைய அரசியல் நிலவரம் பற்றியும், சமுதாயத்திற்காக முஸ்லிம் லீக் பணிகள் பற்றியும், சிறப்புரையாற்றினார்கள். மேலும் இளம்பிறை மாநாட்டின் சிறப்புகள் பற்றியும் அதில் கலந்துக்கொள்வதின் அவசியம்பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்கள். மாநாட்டில் 15 முன்மாதிரி மஹல்லா ஜாமாத்துகளுக்கு விருதுகள் வழங்குவதுபற்றியும் எடுத்துரைத்தார்கள்.விழுப்புரம் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள மாநிலத்து முனவ்வர் அலி சிகாப்தங்கள் கலத்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக காயிதேமில்லத் பேரவை ரஹமத்துல்லா அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில ஓழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் நன்றியுரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, சங்கராபுரம் போன்ற ஊர்களில் இருந்து வருகைபுரிந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நகர முஸ்லிம் லீக், முஸ்லிம் லீக் இளைஞர் அணி, மாணவர் அணி உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு உள்ளூர் வாசிகள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.

 

 

 

நன்றி – செய்தி புகைப்படம் உதவி : IUML – MSF 

Advertisements