மின் விளக்கு பொறுத்தவும், சீரமைப்பு பணி மேற்கொள்ளவும் – த.மு.மு.க மனு


20131124-082400.jpg

 

நேற்று முன்தினம் 22.11.2013 வெள்ளிக்கிழமை கோட்டக்குப்பம், பர்கத் நகர் 3 வது மெயின் ரோடு குடிநீர் தேக்க தொட்டி அருகில் உள்ள ஒரு வீட்டில், பெண்கள் தனியாக இருப்பதை அறிந்த சமூக விரோதிகள் வீடு புகுந்து கதியை காட்டி மிரட்டியதை அடுத்து பயந்து போய் அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியே வந்து சத்தம் போட்டதை தொடர்ந்து. முகத்தில் கர்சீப் அணிந்திருந்த அந்த சமூக விரோதிகள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். பின்பு காவல் துறைக்கு தகவல் தரப்பட்டு அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதைப்பற்றி தகவல் அறிந்த பர்கத் நகர் த.மு.மு.க வினர் சம்பவத்தை விரிவாக சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்தனர்.

 

பின்பு இது பற்றி காவல் துறையிடம் தெரிவிக்கையில்… தொடர்ந்து பர்கத் நகர் பகுதியில் சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரிப்பதால் காவல் துறை ரோந்தை அதிகரிக்கவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தபட்டது.

 

மின்விளக்கு இல்லாததும் சமூக விரோத செயல்களுக்கு வசதியாக இருப்பதால், பல முறை அந்த பகுதி கவுன்சிலர் பார்த்திபன் நடவடிக்கை எடுக்காததால். நேற்று 23.11.2013 பர்கத் நகர் கிளை த.மு.மு.க சார்பாக கோட்டகுப்பம் பேரூராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது. பின்பு பேரூராட்சி தலைவருக்கும் மனுவின் நகல் அளிக்கப்பட்டு உடனடியாக பர்கத் நகர் பகுதிக்கு உட்பட்ட 13வது மெயின் ரோடு, 6, 8, 9,10,11,12,13 ஆகிய குறுக்கு தெருக்களில் மின் விளக்கு பொறுத்தவும் மற்றும் கோட்டகுப்பம் முழுவதும் சீரமைப்பு பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

 

பர்கத் நகர் கிளை தலைவர் ஆபிதீன், செயலாளர் உமர் , துணை செயலாளர் அபுதாகிர், மாணவர் இந்திய முபாரக், சதாம் மற்றும் 10 ற்க்கும் மேற்பட்ட பர்கத் நகர் த.மு.மு.க வினர் பேருராட்சியிடம் மனு அளிக்கையில் உடன்னிருன்தனர்.

 

 

நன்றி : செய்தி புகைப்படம் உதவி எ. ரியாஸ் அஹ்மத் 

Advertisements