கிஸ்வா சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்


DSC_0735

 

கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநல சங்கம் (KISWA) மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) இணைந்து இன்று (24/11/2013)  கோட்டகுப்பம் ஊராட்சி துவக்க பள்ளி வளாகத்தில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. கிஸ்வா  சங்க தலைவர் A. முஹம்மத் பாரூக் வரவேற்றார். மேலும் I. அப்துல் ஹக்கீம் என்னும் முஜிப், ஹாதர் பாஷா, முபாரக், முன்னாள்  பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமித் மற்றும் K.  நஜீர் , ஜாமியா மஸ்ஜித் செயலாளர் முஹம்மத் யூசூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவ முகாமை ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஹாஜி. எசனுல்லாஹ்  தொடங்கி வைத்தார்.இதில் முதன்மை மருத்துவர்கள் டாக்டர். பிராதப்பன் மற்றும் டாக்டர். அருண் குமார்  கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை மற்றும் சிகிச்சை வழங்கினார்.

 

முகாமில் குடல்வால் ,விரையில் நீர்கோர்வை, மார்பக  வீக்கம், இரத்த குழாய் வியாதிகள் , வயிறு விக்கம்  போன்ற பல தரப்பட்ட நோய்களுக்கு 145 பேர்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 46  க்கும் மேற்பட்டவர்களுக்கு  கட்டணமில்லா சிகிச்சைகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சைகள் செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் மருத்துவ முகாமில் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் செய்துகொள்வதற்கு தேவையான உணவு,தங்குமிடம்,பேருந்து வசதி ஆகியவை இலவசமாக செய்து கொடுக்கப்பட்டன. விரைவில் இவர்களுக்கு மேல்  சிகிச்சை செய்யப்பட உள்ளது.

 

முகாம் ஏற்பாடுகளை கிஸ்வா உறுபினர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

 

Advertisements