கோட்டக்குப்பம் அங்கன்வாடி கிஸ்வா அமைபினரால் புனரமைக்கபட்டது


1466281_578222192231743_1413323065_n601546_578219048898724_1863133313_n

கோட்டகுப்பம் தைக்கால் திடலில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, இந்த கட்டடம் சீர்குலைந்து,  பராமரிப்பு இல்லாததால்,பொலிவிழந்த நிலையில் காணபட்டது . சுற்றுப்புற சுகாதாரமும் கேள்விக்குறியாகி இருந்தது , மேலும் சில நாட்களுக்கு முன்பு அதன் சுற்று சுவர் இடிந்து விழுந்து, சமூக விரோதிகள் உள்ளே போய் வந்தனர். குழந்தைகள் விளையாட இடம் இல்லாமல் அலங்கோலமாக இருந்த இடத்தை, கோட்டகுப்பம் இஸ்லாமிய பொது நல சங்கத்தினர் (KISWA ) மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிந்து விழுந்த சுவரை புரனமைத்து,  அதற்கு வண்ணம் அடித்தனர். புதர் மடிந்த இடத்தை சுத்தம் செய்தனர். பொலிவிழந்த கட்டடம் இப்போது புதிதாக காட்சி அளிக்கிறது.  இளைநர்களின் இந்த சமூக செயல்  பொது மக்களால் பெரிதும் பாராட்டபட்டது.

Advertisements