கோட்டக்குப்பத்தில் பலத்த மழை


20131104-085413.jpg

வங்கக்கடலில் இலங்கைக்கு தென்மேற்கில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மாலத்தீவு நோக்கி நகர்ந்துவிட்டதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கோட்டக்குப்பத்தில் பல தெருக்கள் தண்ணீரில்  மிதந்து கொண்டுள்ளது. புதுவை மற்றும் கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.  பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களுக்கு புயலுக்கு முன்பு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.

 

Advertisements