கோட்டக்குப்பத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை


20131024-215404.jpg

 

சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சார்பாக இன்று கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்து காலாவதியான உணவுப் பொருட்களை அழித்தனர்.கோட்டக்குப்பத்தில்  அமைந்துள்ள மளிகைக்கடை, டீ கடை, ஹோட்டல், உணவு பண்டங்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் உணவு ஆய்வாளர் திடீர் ஆய்வு நடத்தினர்.

 

இதில் பள்ளிவாசல் எதிரே உள்ள பழ கடைகளில் அழுகிய பழம் இருந்ததையும் கண்டுபிடித்து அனைத்து பொருட்களையும் சேகரித்து அழித்தனர். இனி பொது மக்கள் அனைத்து கடைகளிலும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதிகளை பார்த்து படித்து வாங்க வேண்டும். இது உடல் நலத்திற்கும், குடும்ப நலத்திற்கும் பாதுகாப்பானது. அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மேலும் இது போன்ற சோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளபடவேண்டும்.  காலாவதியான பொருட்களை இனம் கண்டால் சுகாதார நிலைய அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.

 

வீடியோ மற்றும் படங்கள் உதவி : லியாகத் அலி

Advertisements