இன்று வரை 1000 விமர்சனம்


Sans titre

கோட்டகுப்பம் இணையத்தளம் ஆரம்பித்தது முதல் பல விமர்சனங்களை படிகட்டாக அமைத்து தான் இந்த மேடையில் நாம் நின்று கொண்டு இருக்கிறோம். ஆரம்பத்தில் பலர் எங்களை ஒரு கட்சி சார்பானவர்கள், அல்லது ஒரு இயக்கத்தின் சார்பானவர்கள் என்று எண்ணி இருந்தனர், அந்த விமர்சனத்தை தட்டி விடாமல் அதன் மேல் நடந்து வந்து உங்களுக்கு நடு நிலையான செய்தி கொடுப்பதில் ஆர்வம் இருந்ததால், இந்த உயரம் அடைந்தோம். இந்த இடத்தில ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறோம், கோட்டகுப்பம் நல்ல விதத்தில் இயங்க பலர் ஆர்வமாக உள்ளனர், பலர் நமக்கு ஏன் இந்த வேலை என்று புறம் தள்ளி வந்தனர், இதில் புறம் தள்ளிய நபர்கள் தான் நாம் ஆக்கபுர்வமான செயல் செய்யும் பொது தடை ஏற்படுத்தி வருகிறார்கள். எங்களை பழி சொன்னவர்கள் காலம் போக்கில் எங்களை புரிந்து கொண்டு இப்போது எங்களோடு தோள் சேர்ந்து பனி புரிந்து வருகிறார்கள். சிலர் எங்களை வன்மம் கொண்டு விமர்சித்து வந்தவர்களை  அவர்கள் தரம் கருதி தள்ளி வைத்தோம்,  உங்களின் ஆக்க பூர்வமான கருத்து இருந்தால் அதை இருகரம் கொண்டு வரவேற்கிறோம். சில நல்ல உள்ளம் சொல்லிய ஆலோசனைகள் நாங்கள் ஏற்று உடனே செயல் படுத்தினோம், உதாரணமாக :- 

 

  • தினம் ஒரு திருகுரான் வசனம் பதிய சொன்னார்கள், அதை செய்தோம்.

  • பழைய செய்திகளை தேட வசதி ஏற்படுத்தி கேட்டார்கள், செய்தோம் 

  • புதுவையில் உள்ள முக்கிய தகவல் தர சொன்னார்கள், சொன்னோம் 

 

இது போல் ஆக்கபுர்வமான ஆலோசனை வழங்கிய அன்பர்களுக்கு நன்றி, மேலும் நல்ல ஆலோசனை வரவேற்க படுகிறது.

 

 

எழுதும் நாங்கள் மட்டும் அல்ல,

எழுதப்பட்ட செய்திகளும் ,

எதிர்பார்க்கும்,

உங்கள் விமர்சனத்தை!

நம்மில் சிலர்,

விலை உயர்ந்ததையும்,

விலை இல்லாததையும்,

ஒன்றாகவே பார்க்கிறோம்,

ஆம்,

விலை உயர்ந்தது,

என்றால்,

இது நம் தகுதிக்கு மீறியது என்றும்,

விலை இல்லாதது,

என்றால்,

நம் தகுதிக்கு குறைவானது என்றும்!

பாராட்ட கூட,

நாம்,

நம் நண்பனாகவோ,

நம் உறவாகவோ,

இருக்க வேண்டும்,

என்று இருகிய மனதோடு,

இருப்பது சரியல்ல!

விமர்சிக்க பட்டால்,

மட்டுமே,

சமுதாயமும்,

அரசாங்கமும்,

சரிபடுத்த படும்!

உலகம் போற்றும்,

அறிவாளி நம்,

அருகில் இருந்தால்,

கூட,

அவனை அறிவாளி,

என்று,

நம்மில் சிலர் சொல்லமாட்டோம்!

ஆதாயம் தேடும்,

உலகில் அன்போடு,

பிறரை,

பாராட்ட கூட,

மனமில்லை நமக்கு!

சறுக்கி விழாமல்,

யாரும் சிகரம் தொட,

முடியாது,

உச்சம் தொட்டு,

மிச்சம் என்று ,

இருக்கும் உயிர் மட்டும்,

நெஞ்சம் எல்லாம்,

ஏங்குவது,

உங்கள் பராட்டுக்கே !!!

உங்கள் விமர்சனங்கள்

வரவேற்கபடுகிறது!

 

 

 

Advertisements