பர்கத் நகர் நீர் தேக்க நிலையத்துக்கு பாதுகாப்பு சுவர்


20131008-105053.jpg

கோட்டகுப்பம் பர்கத் நகரில் உள்ள மேல் நிலை நீர் தேக்க நிலையம்  இருக்கும் பகுதி இது நாள் வரை பாதுகாப்பு இல்லாமல் இருந்து வந்தது, அதை  பயன் படுத்தி சமுக விரோத சக்திகள் இந்த இடத்தை தங்கள் பயன்பாட்டுக்கு  பயன் படுத்தி வந்தனர். பொதுமக்களுடன் இணைத்து கோட்டகுப்பம் த மு மு க இந்த இடத்தில் பாதுகாப்பு சுவர் எழுப்ப பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். தற்போது இந்த இடத்தை சுற்றி கோட்டகுப்பம் பேரூரராட்சி மதில் சுவர் எழுப்பி உள்ளது. மேலும் சின்ன கோட்டக்குப்பத்தில் இருந்து வரும் தண்ணீரை  சேமித்து வைக்க ஒரு தொட்டியும் கட்டி உள்ளனர். கோட்டகுப்பம் பேரூராட்சி பொதுமக்களுக்கு பயன் உள்ள பேரூராட்சியாக இருப்பதில் நாம் எல்லோரும் சம்மந்த பட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

 

Advertisements