சிறுபான்மை மாணவர்கள் உதவித்தொகை: விண்ணப்பிக்கும் காலவரம்பு நீட்டிப்பு


 

20131005-035416.jpg

 

சிறுபான்மை மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணபிக்க காலம் நீடிக்கப்பட்டுள்ளது.மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப் படையிலான புதிய கல்வி உதவித் தொகைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மைய அரசால் வரும் 10ம் தேதி வரை காலவரம்பு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இது வரை பள்ளி மேற் படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்காத தகுதியுள்ள சிறுபான்மை மாணவர்கள் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி http://www.momascholarship.gov.in இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

Advertisements