கோட்டகுப்பதில் த மு மு க கண்டன ஆர்பாட்டம்


20130914-152827.jpg

உத்திரப்பிரதேசம் முஸாபர் நகரில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதல் கொலையை இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து அரசியல் ஆதாயத்திற்கு அப்பாவி பொதுமக்களை பலியாக்கி, பொதுச் சொத்துக்களை சூறையாடி வருபவர்களை கண்டித்தும், உத்திரப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் இதர சமூகத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கி வன்முறையாளர்களை ஒடுக்கி அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசையும், உத்திரப்பிரதேச அரசையும் வலியுறுத்தி இன்று மாலை கோட்டகுப்பம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்சார்பில் 14.09,2013 அன்று மாலை 4 மணிக்கு பேரூராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க மாநில துணை தலைவர் குணங்குடி ஹனிபா கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் மற்றும் விழுப்புரம் மாவட்ட தலைவர் M.Y.முஸ்தாக்தீன், மாவட்ட செயலாளர் J.அபூபக்கர் அஜ்மல், ம.ம.க செஞ்சி ஒன்றிய செயலாளர் செய்யது உஸ்மான் மற்றும் மாணவர் இந்தியா மா.செயலாளர் அ.ரியாஸ் அஹமது கண்டன உரை ஆற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டதிற்கு கோட்டகுப்பம் நகர தலைவர் A.தாஜ்தீன் தலைமை தாங்கினார். நகர ம.ம.க துணை செயலாளர் A.சாதிக் பாஷா நன்றி உரையாற்றினார். மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெரும் திரளாக பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Advertisements