விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நிதி பயன்படுத்தப்படவில்லை


தமிழக சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. ஆணையத்தின் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு ஆதிசங்கர் எம்பி பேசியதாவது:  கருத்து கேட்பு கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பாதது வருத்தம் அளிக்கிறது. தாட்கோவில் சிறுபான்மையினருக்கு முறையாக கடனுதவி வழங்கப்படுவதில்லை. தாட்கோ திட்டங்கள் குறித்து சரியான முறையில் விளம்பரம் செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவி சங்கத்துக்கு இஸ்லாமியர்கள் ரூ.2.35 லட்சம் கொடுத்துள்ளனர். அந்த நிதியையும் சேர்த்து ரூ.7.05 லட்சம் வழங்க வேண்டும். 

 

10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு பரிசு வழங்குவதற்காக 2012-13ம் நிதியாண்டில் ரூ.40 ஆயிரம், விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகையில் ரூ.14 ஆயிரம்தான் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.26,000 நிலுவையில் இருக்கிறது.  எதிர்காலங்களில் இதுபோன்று நடக்கக்கூடாது. சிறுபான்மையின மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகையை முழுமையாக அவர்களுக்கே வழங்க வேண்டும். ரம்ஜான், பக்ரீத் பண்டிகையில் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து சிறப்பு தொழுகை நடத்த இடம் ஒதுக்க வேண்டும். கபஸ்தானம், கல்லறை கட்ட அனுமதிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். மேலும் மக்கள் குறை கேட்பு கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு அழைப்பு அனுப்பவில்லை. அழையா விருந்தாளியாகதான் கலந்துகொண்டேன். இதற்கு கண் டனம் தெரிவித்து கொள்வ தாக தெரிவித்தார்.  

Advertisements