சூடுபிடிக்கிறது தமுமுக ஜூலை 6 பேரணி!!


July6 Tmmk 8

தமிழகம் முழுவதும் ஜூலை 6 அன்று தமுமுக நடத்தும் முஸ்லிம்களின் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி குறித்தான விளம்பரங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன.ஆம் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து உயர்த்தப்பட வேண்டும், 10 ஆண்டுகள் நிறைவு செய்த சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும்,

 

 

திருமணப்பதிவுச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கான திருத்தம் கொண்டு வரவேண்டும் ஆகிய முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி என்று தமுமுக மாநில நிர்வாக குழுவில்அறிவித்தது தான் தாமதம்.தமிழகம் முழுவதும் தமுமுக வினர் பம்பரமாய் சுழன்று களப்பணியாற்றி வருகிறார்கள். பிராமண்டசுவர் விளம்பரங்கள், கண்ணை கவரும் டிஜிட்டல் போர்டுகள், பதாகைகள், விளம்பர பேனர்கள்,வால்போஸ்டர்கள், பிட் நோட்டிசுகள், ஸ்டிக்கர்வகைகள் என ஒரு பக்கம் விளம்பரப்படுத்தி சமுதாய மக்களை கவர்ந்து வருகிறார்கள். மறுபக்கம் தெருமுனைப் பிரச்சாரங்கள், வாகன ஊர்வலங்கள்,தலைவர்கள் பங்கு பெறும் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள், மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, வட்ட செயல்வீர்கள் கூட்டம், தனி நபர் சந்திப்பு, ஜமாத்தார்கள் சந்திப்பு என தினம்தினம் ஜூலை 6 பேரணிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில நிர்வாகிகளின் தனிகரில்லா செயற்பணிகள், ஓய்வில்லா களப்பணிகள் எனபேரணி குறித்தான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக அரசையும், அரசியலையும்பிரமிக்க வைக்கும் அளவிற்கு இறைவனின் மாபெரும்உதவியோடு சென்னை லட்ச்சக்கணக்கில் முஸ்லிம்கள் திணறடிக்கப்போகின்றார்கள்…

 

 

எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே… இறுதி வெற்றிநமது அணிக்கே….

அழைப்பு: கோட்டகுப்பம் தமுமுக

Advertisements