கோட்டகுப்பம் முஸ்லிம் மாணவ பேரவை சார்பில் பாராட்டு விழா


கோட்டகுப்பம் தைக்கால் திடலில் முஸ்லிம் லீகின்  துணை அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் சார்பில்  10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்க 16-06-2013 அன்று மதியம் 3-00 மணியளவில்  மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு   இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக தலைவர் போராசியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.  சித்தர்கோட்டை. டாக்டர் ஹீமானா சையத் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி குறித்து பேசினார்கள்.  மேலும் நிகழ்ச்சியில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

 

நன்றி : புகைப்படம் உதவி MSF Kottakuppam