கோட்டகுப்பம் TNTJ கோடை கால பயிற்சி வகுப்பு


வருடம் தோறும் மாணவ மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி வகுப்புகளை கோட்டகுப்பம் TNTJ நடத்திக்கொண்டு வருவதை தாங்கள் அறிந்திருபிர்கள். அதன் அடிப்படையில் இந்த வருடமும் நாம் இந்த வகுப்புகளை நடத்திக்கொண்டு இருகின்றோம். இந்த கோடை கால பயிற்சி நிறைவு தினத்தில் , மாணவ மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நிறைவு நிகழ்ச்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மேயர் முத்துபிள்ளை மண்டபத்தில் நடத்த இருக்கின்றோம். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான போதிய பொருளாதாரம் நம்மிடம் இல்லை. எனவே இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உங்கள் பொருளாதார  உதவியை வேண்டுக்கின்றோம்.

 

 இன்ஷா அல்லாஹ் வருங்கின்ற ஞாயிற்றுக்கிழமை (12/5/13) அன்று இந்த கோடைக்கால பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அதில் பங்கேற்கிற மாணவ மாணவிகளுக்கு அறுதல் பரிசும், சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு தனியாக பரிசு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு திட்டங்கள் அனைத்தும் நீங்கள் கொடுக்கும் பொருளாதாரத்தை கொண்டே செயல்படுத்த படும். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உங்களின் பொருளாதாரத்தை வாரி வழங்கவேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கின்றோம். இந்த நிகழ்ச்சிக்கு உங்களையும் உங்கள் குடுப்பைத்தாரையும் அன்புடன் அழைக்கின்றோம். இந்த நிகழ்ச்சி வெற்றிப்பெற இறைவனிடம் துவா செய்யவும்.

 

தகவல் : கோட்டகுப்பம் TNTJ 

 

Advertisements