மே தினம்


8மணி நேர வேலை.

8 மணி நேர மன மகிழ்வு…

8 மணி நேர உறக்கம்..

இது தான் உழைப்பாளர் தினத்தின் தாரக மந்திரம்.

may day

உழைப்பாளர் தினம், உலகம் முழுவதும் பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போடும் நன்னாள். உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள். காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான,கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள்…பட்ட கஷ்டங்கள் கணக்கற்றவை. உழைத்துக் களைத்த மனிதனுக்கு சிறப்பு தந்து அவன் உழைப்பிற்கு ஓர் அங்கீகாரம் வழங்கும் நாளான உழைப்பாளர் தினத்தை இப்படியாக ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றன.

Advertisements