மாணவ மாணவிகள் கல்விக்கான உதவித்தொகை (scholarship) வாய்ப்பை நழுவ விடாதீர்!


 

அரசு வழங்கும் நலத்திட்டங்களை, உதவித்தொகைகளை முஸ்லிம்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை.காரணம் பலருக்கு அது பற்றி சரிவர தெரிவதில்லை.

மாணவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு மத்திய / மாநில அரசால் கல்விக்காக என்னென்ன உதவித்தொகை (scholarship) வழங்கப்படுகிறது?  வழங்கப்படும் உதவித்தொகைகளை எப்படி பெறுவது?

 

  • பள்ளிக்கூட மாணவர்கள், (10 வகுப்பு வரைபள்ளிக்கூடத்தில் 6 முதல் 10 வகுப்பு படிப்பவர்களுக்கு 4000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

தகுதி: – பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு பள்ளி இறுதித்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அரசு,  அரசு உதவி பெறும்,  அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், கல்வி நிலையங்களில் படிக்க கூடியவராக இருக்க வேண்டு்ம்.

 

  • +2/ , பாலிடெக்னி்க், ITI/ITC/Diploma in Nursing மாணவர்கள்,

             +2 மாணவர்களுக்கு 7000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

பாலிடெக்னி்க் ITI/ITC/Diploma in Nursing மாணவர்களுக்கு 10000 ரூபாய்  வரை வழங்கப்படுகிறது.

தகுதி :- பெற்றோர் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

 

அரசு,  அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மேல்நிலைபள்ளிகள், பாலிடெக்னிக் , ஐ.டி.ஐ,  ஐ.டி.சி., போன்ற கல்வி நிலையங்களில் படிக்க கூடியவராக இருக்க வேண்டு்ம்.

  • பட்ட படிப்பு மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டபடிப்புக்காக 3000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

தகுதி :- பெற்றோர் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

 

  • தொழில் கல்வி / தொழில் நுட்ப கல்வி / BE.,B.Tech / MBA.,MCA. மாணவர்களுக்கு 

மத்திய அரசால் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் படிப்பவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுவதும் வழங்கப்படும்.

மற்ற கல்வி நிலையங்களில் படிப்பவர்களுக்கு சேர்க்கை கட்டணம் – admission fee , கற்பிப்பு – tuition fee ,தேர்வு – exam fee , நூலகம்-  library fee  உட்பட அதிகபட்சமாக ரூ.20000 வழங்கப்படும்.

தகுதி:- பெற்றோர் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முந்தைய ஆண்டு பள்ளி  +2 / பாலிடெக்னிக் இறுதித்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இரண்டாம் வருடம் புதுப்பிக்கும்போது முதல் ஆண்டில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

 

இணைய தளங்கள்

www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm

http://www.momascholarship.gov.in

 

இந்த இணைய தளங்களில் விண்ணப்ப படிவங்களை download செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான ( சாதி சான்று, வருமான சான்று, பேங்க் கணக்கு எண் IFS CODE உட்பட) சான்றுகளுடன் குறிப்பிடப்பட்ட காலக் கெடுவிற்குள் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளவும்.

 

Credit / niduronline.

Advertisements