ECR அருகே குப்பையை எரிப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பு


20130415-193513.jpg

கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில்  குப்பையை எரிப்பதால், பல கி.மீ., தூரத்திற்கு, புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால், கனரக வாகனங்கள் போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் வாகனங்கள், விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. விபத்துகளை தவிர்க்க, பகலிலேயே வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

கோட்டகுப்பம் பகுதி மற்றும் இல்லாமல் புதுவையில் இருந்து வரும்  குப்பையை, சாலையில் ஆங்காங்கே கொட்டி விட் செல்கின்றனர்.மேலும் மலைபோல் குவிந்து கிடக்கும்குப்பைக்கு, மர்ம நபர்கள், தீ வைத்து விடுகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், வாகனம் ஓட்டும் போது கண்ணை மறைக்கும் அளவுக்கு புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், கனரக வாகனங்கள் ஒன்றோடு மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்ற பலரும், கனரக வாகனங்கள் எதிரே வருவது தெரியாமல், தட்டுத்தடு மாறி சென்றனர். கோட்டகுப்பம் பேரூராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து, இது போல் சமுக விரோத செயலை தடுத்து நிறுத்த வேண்டும்.

20130415-193517.jpg

20130415-193521.jpg