வானூர் முன்னோடி தாலுகாவாக தேர்வு


vanur_constituencymaps

 

 

இணையதள வழியில் நில ஆவணங்களை மென்பொருளில் பராமரிப்பதற்கு, வானூர் தாலுகா முன்னோடி தாலுகாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இணையதள வழியில் நில ஆவணங்களை பராமரிப்பதற்குரிய மென்பொருளை, முன்னோடித் திட்டமாக செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா முன்னோடி தாலுகாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தாலுகாவில் கணினியில் பராமரிக்கப்படும், நில ஆவணத் தகவல் தொகுப்பினை, நடுவண் மூலம் கணினிக்கு பதிவேற்றம் செய்யும் முன்னர், தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் வண்ணம் மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, வானூர் தாலுகாவை சேர்ந்த நில உடமைதாரர்கள் தமது நில ஆவணங்களில் மாற்றம் செய்யவோ, பிழைகளை நீக்கம் செய்யவோ விரும்புவோர், விண்ணப்பங்களை நில உரிமைப் பத்திரங்களின் நகல்களுடன் வரும் மே., 10ம் தேதி அல்லது அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட வி.ஏ.ஓ., மற்றும் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

Advertisements