சாலையின் ஓரத்தில் மரண பள்ளம்


DSC02085

DSC02086

DSC02087

பொதுமக்கள்  அதிகளவில் பயன்படுத்தும் தெருவாக கோட்டகுப்பம் ஆசாத்  தெரு உள்ளது. இந்த  தெரு வழியாக தான் ஷாதி மஹால் தர்கா மற்றும் நியாய விலை கடை  செல்லும் பொதுமக்கள் சென்று  வருகிறார்கள். இத் தெரு வழியாக காலை, மாலை வேளைகளில்  செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும்  அதிகம்.

 

 கோட்டகுப்பம் அணைத்து பகுதிகளுக்கும் செல்லும் குடிநீர்  குழாய்க்கு நோண்டிய குழியை மூடி  இருந்த சிமெண்ட் பலகை கனரக வாகனத்தால் உடைந்துள்ளது.  இதனால் தெருவின்  நடுவே பெரிய குழி தோன்றி  இருப்பதால், இரவில் வாகனங்களில் செல்வோருக்கும் நடந்து செல்வோரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

 

 இது வரை அதை சரி பண்ணாமல் இருப்பதால் பொதுமக்கள் பயத்துடன் இந்த தெருவில் நடந்து செல்கிறார்கள்.மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதில் விழுந்து விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. உள்ளூர் மக்களுக்கு இந்த பள்ளம் இருபது தெரிந்து இருப்பதால் அவர்கள் ஜாக்கிரதையுடன் போய் வருகிறார்கள். ஷாதி மஹாலில் விசேஷம் நடக்கும் நேரத்தில் வெளியூர் மக்களுக்கு இந்த பள்ளம் இருப்பது தெரிய வாய்ப்பு கிடையாது. இரவில் பல மணி நேரம் மின்சார இல்லாத நேரத்தில் வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு இந்த பள்ளத்துக்கு ஒரு சிமெண்ட் ஓடு கொண்டு மூட பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது சம்மந்தமாக இந்த வார்டு கவுன்சிலர் சம்மந்த பட்ட அதிகாரிகளை அணுகி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்

Advertisements