வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்


சென்ற 2012 டிசம்பர் மாதம் 29ம் தேதி “தகுதியற்றவர்களிடம் பொருப்பு” என்ற தலைப்பில் நெட்டில் நாங்கள் வெளியிட்ட செய்தியை திரும்பபெருவதோடு, அத்தகைய செய்தியை வெளியிட்டமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

  • கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் தற்போதுள்ள நிர்வாகம் பல வருடங்களாக பொதுமக்களுக்கு பயன் அள்ளிக்காத நிர்வாகமாக செயல்படுவதாக செய்தி வெளியிட்டமைக்காகவும்;

 

  • ஜாமியா மஸ்ஜித் சொத்துகளை நிர்வகிக்க திறன் இல்லாத நிர்வாகமாகவும் தற்போதுள்ள பள்ளி நிர்வாகம் உள்ளது என்ற தோரணையில் செய்தி வெளியிட்டமைக்காகவும்;

 

  • பள்ளிவாசல் மதரசா சுற்று சுவரை நிர்வாகத்தின் அனுமதியின்றி இடித்த நபரை உடனடியாக நிர்வாகம் அழைத்து அவரிடம் முறைப்படி விசாரணை செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்துள்ளது நிர்வாகம் எடுத்த நடவடிக்கைய அறிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு நிர்வாகத்தை தவறாக விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டமைக்காகவும்;

 

  • ஜாமியா மஸ்ஜித்தின் சொத்துக்கள் அணைத்தும் உள்ளது உள்ளபடியே இருக்க, ஜாமியா மஸ்ஜித்தின் சொத்துக்கள் இன்னும் இருகிறதா இல்லையா? நிர்வாகம் மோசடி செய்து விட்டதா என்ற தோரணையில் செய்தி வெளியிட்டதோடு அல்லாமல், தற்போதுள்ள நிர்வாகம் பள்ளிவாசல் சொத்துகளை எப்படி பராமரிப்பார்கள் இது ஆண்டவனுக்கு தான் தெரியும் என்று செய்தி வெளியிட்டமைக்காகவும் எங்களின் வருத்தத்தை வாசர்களுக்கு இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மேலும் இனிவரும் காலங்களில் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் சமந்தப்பட்ட செய்தியை ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தின் அனுமதி இன்றி வெளியிட மாட்டோம் என்று கோட்டகுப்பம் செய்திகள் — நம்ம ஊர் செய்தி வாசர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisements